32.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
கூந்தல் பராமரிப்பு

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை

 

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு வரும்.

கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

மேலும் கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும். தினமும் இரவில் படுக்க போகும் முன்னால் எண்ணெய் தோய்த்து கூந்தலை நன்றாக வாரி சடை போட்டு கொள்ள வேண்டும். சீப்பு தலையில் நன்றாக பதியும் படி தலையை வார வேண்டும்.

Related posts

முடி நன்றாக செழித்து வளர மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்!….

sangika

அடர்த்தியான, நீளமான முடியை பெற என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது!

nathan

எண்ணெய்ப் பசையான கூந்தல்

nathan

மொட்டை போட்டால் முடி வேகமாக வளருமா?

nathan

இது மீண்டும் முடி வளர வேர்கால்களை உருவாக்கி தருகிறது!…

sangika

இதோ உங்களுக்காக..!! இயற்கை முறையில் இளநரையை நிரந்தரமாக நீக்கலாம்..!

nathan

இது தலையை சுத்தம் செய்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது….

sangika

சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?

nathan

இயற்கை முறைகளைக் கொண்டு இந்த இளநரையை மாற்றி விடலாம் முயன்று பாருங்கள்

sangika