27SMMANINEW 2

இதை நீங்களே பாருங்க.! நடிகையின் கன்னத்தைக் கிள்ளி வெட்கப்படும் மணிரத்தினம், புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர்.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் காற்று வெளியிடை.

நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நாயகியாக அறிமுகமாகி நடித்திருந்தார். மேலும் அவர் இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று இருந்தார்.

 

இந்த நிலையில் இப்படம் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டதை நினைவு கூறும் வகையில் அதிதி ராவ் சில தினங்களுக்கு முன்பு மணிரத்தினத்திற்கு ரோஸ் கொடுக்க அவர் வெட்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

மேலும் அந்த புகைப்படத்தில் மணிரத்னம் அதிதி ராவ் கன்னத்தை கிள்ளி இருந்தார். தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய சர்ச்சை இயக்குனரான ராம் கோபால் வர்மா.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் மணிரத்னம் இப்படி வெட்கப்பட்டு நான் பார்த்தது இல்லை என கூறியுள்ளார்.