பல நன்மைகளை வழங்கும் இளநீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா? கூடாதா? என்பது விவாதத்திற்கு உரிய ஒரு கேள்வியாகும்.
ஏனெனில் இனிப்பு சுவை கொண்ட இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் கலோரிகள் குறைவாக இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.
இதில் எது உண்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நோய்க்கு தேங்காய் நீர் பாதுகாப்பானதா?
-
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக இளநீர் குடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- சர்க்கரை உள்ளவர்கள் மட்டுமல்ல சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட தாங்கள் தினமும் குடிக்கும் இளநீரின் அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
- ஏனெனில், ஆரோக்கியமான பானமாக இருந்தாலும் தேங்காய் நீரில் பிரக்டோஸ் உள்ளது, இதன் அளவு குறைவாக இருந்தாலும் (சுமார் 15%), பிரக்டோஸ் உங்கள் இரத்த சர்க்கரை அளவில் தலையிடக்கூடும்.
எவ்வளவு குடிக்க வேண்டும்?
- ஒரு நாளைக்கு சராசரியாக 8 அவுன்ஸ் அதாவது இரண்டு முறை 250மிலி வரை தேங்காய் நீர் குடிக்கலாம்.
- இந்த அளவு அதிகரிக்கும் போது அது உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- குறிப்பாக இளநீரை வேறு பொருட்களுடன் சேர்க்காமல் அதன் இயற்கை வடிவத்திலேயே குடிப்பதுதான் நல்லது. சர்க்கரை நோய்க்கு ஏன் இளநீர் நல்லது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள்
முன்னரே கூறியது போல இளநீரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும், தாதுக்களும் உள்ளது. இந்த சுவையான பானத்தின் ஒவ்வொரு கோப்பையிலும் 5.8 மி.கி வைட்டமின் சி, 0.1 மி.கி ரைபோஃப்ளேவின், 57.6 மி.கி கால்சியம், 60 மி.கி மெக்னீசியம், 600 மி.கி பொட்டாசியம், 252 மி.கி சோடியம் மற்றும் 0.3 மி.கி மாங்கனீசு உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக சோடியம் மற்றும் பொட்டாசியம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.