26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
cough

உங்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கா? இதோ அற்புதமான எளிய தீர்வு….

கொரோனா வைரஸ் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஏற்கெனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்தநேரத்தில் பிரத்யேகமாக எடுத்துக் கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்னனென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • கோவிட் – 19 இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் பரவும் என்பதால் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முடிந்தவரை மற்றவர்களிடமிருந்து 10 அடிகளாவது விலகியிருக்க வேண்டியது அவசியம்.
  • கோவிட் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்கள் வெளியில் செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
  • வெளியில் சென்று வந்தவுடன் கைகள் மற்றும் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அசுத்தமான , தூய்மையற்ற பொருள்களைத் தொடக்கூடாது.
  • சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கும் தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

  • ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக் குக் கொரோனா பாதிப்பு ஏற்படும்போது அது நுரையீரல் அடைப்பாக மாறி மரணம் வரை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
  • ஒருவேளை இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் நிலையில், ஏற்கெனவே சுவாசப் பிரச்சினைக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் கொரோனாவுக்குத் தரப்படும் மருந்துகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.cough
  • இவர்கள் ஆறிய குளிர்ந்த உணவுகளை விட சூடான உணவுகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது.
  • அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்ச்சி வடிகட்டிய நீரைப் பருக வேண்டும்.
  • சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும்போது மருத்துவரின் பரிந்துவரின் பேரில் ஆன்டிபயாடிக், ஆன்டி வைரஸ் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
  • மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனேஷன் முறை வழியே செயற்கையாக ஆக்ஸிஜனை உட்செலுத்திக் கொள்ளலாம்.
  • ஆக்ஸிஜனேஷன் பலன் அளிக்காத வேளையில் இவர்களுக்கு invasive ventilation மற்றும் Non – nvasive ventilation முறைகள் மூலம் டியூப் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு மூச்சசுத்திணறல் சரி செய்யப்படும்.