தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சனா.
இவர் வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வரும் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு தற்போது அஞ்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய எடையை இன்னும் குறைத்து குச்சி போல் மாறியுள்ளார். மஞ்சள் நிற உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.