28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
15571244

உங்களுக்கு தெரியுமா பூண்டை உணவில் அதிகம் சேர்த்துகொள்வதால் உண்டாகும் நன்மைகள்…!!

சமையலறையில் முக்கிய இடம் வகிக்கும் பூண்டிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. மருந்தும் மாத்திரையும் செய்யாத பல விஷயங்களை பூண்டு எளிதாக செய்துவிடும்.சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பூண்டு தீர்வை தருகிறது. பரு, படர்தாமரை, தேமல் போன்ற சரும பிரச்சினைகளுக்கு வெறும் பூண்டை பாதிப்பு உள்ள இடத்தின் மீது தேய்த்தால் விரைவில் சரும பிரச்சினை குணமாகும்.

கால் ஆணி எனப்படும் கால் பாதத்தில் ஏற்படும் புண்கள் பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும். இதனால் பலர் நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். ஆனால் இதற்கு எளிதான வைத்தியமே பூண்டுதான். இரவில் தூங்கும் போது புண்டை நசுக்கி கால் ஆணி மீது வைத்து கட்டிவிடுங்கள். ஒரு வாரம் இப்படி செய்தால் போதும். எங்கு ஆணி இருந்தது என்றேத் தெரியாமல் போய்விடும்.வயிற்று உபாதை, கிருமி தொற்று போன்ற காரணங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு பூண்டை பால் அல்லது தண்ணீரில் வேக வைத்து சாப்பிடலாம். தீர்வு கிட்டும்.தாய்மார்களுக்கு பால் சுரப்பது முதல், வயிறு உபாதைகள், சரும பிரச்சினைகள் என பலவற்றுக்கு பூண்டு மருந்தாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பூண்டுக்கு உள்ளது.ரத்த அழுத்தத்தை உடனடியாக சீராக்கும் ஆற்றல் பூண்டுக்கு இருப்பதால் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுவர்கள் உணவில் பூண்டை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.உடலில் நோயை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நமது வெள்ளை அணுக்களுக்குத்தான் உள்ளது. ஒருவர் தினமும் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதய நோய் உள்ளவர்களும், கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களும் பூண்டை உணவில் அதிகமாக சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறைந்து மாரடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.15571244