ஆபாச வீடியோவில் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து பிரபல டிவி நடிகைஅதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரபல மலையாள சின்னத்திரை நடிகை ஜூஹி ரஷ்டகி. இவர், உப்பும் மிளகும் என்ற டிவி சீரியலில் நடித்ததன் மூலம், பிரபலம் ஆனார்.
உப்பும் மிளகும், மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான காமெடி தொடர். இதில் லட்சுமி என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.
டி.வி.தொடர்கள்
செல்லப் பெயர் லச்சு. இதில் அவர் நடிப்பு பேசப்பட்டதன் மூலம் மலையாளிகளின் செல்லப் பிள்ளையாகி இருக்கிறார், ஜூஹி. இவரது தந்தை ரகுவீர் சரண், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அம்மா பாக்யலட்சுமி, கேரளாவைச் சேர்ந்தவர். ராஜஸ்தானில் பிறந்த ஜூஹி, கேரளாவில் வளர்ந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன், இனி டி.வி.தொடர்களில் நடிக்கப்போவதில்லை என்று கூறி இருந்தார்
சினிமாவில் நடிப்பேன்
சீரியல் காரணமாக தனது படிப்பு பாதிக்கப்படுவதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறிய அவர், ஆனால், சினிமாவில் வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இது மலையாள டிவி சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர், கேரளாவை சேர்ந்த டாக்டர் ரோவின் ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.
ஊரடங்கு
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால், சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தின ஊதியம் பெறும் சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக சினிமா தொழிற்சங்கத்தினர் நிதி திரட்டி உள்ளனர்.
வீடியோவில் இருப்பது
இந்த நேரத்தில், சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ ஒன்றும் சில புகைப்படங்களும் திடீரென பரவின. அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஜூஹிதான் என்றும் செய்திகள் பரவின. அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நடிகை ஜூஹி, அந்த போலி வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அது நான் இல்லை
‘என் பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இதுபோன்ற போலியான விஷயங்களை மக்கள் புரிந்துகொள்ளுங்கள். யார் அதை செய்திருந்தாலும் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். இது தொடர்பாக டிஜிபியிடமும் எர்ணாகுளம் போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.