25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.

விளக்குடன் ஜொலித்த நயன்தாரா… அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

இந்தியாவில் நேற்றைய தினத்தில் இரவு 9மணியிலிருந்து 9.09 வரை விளக்கு ஏற்றி வைக்கக்கோரிய மோடியின் வேண்டுகோளை ஒட்டுமொத்த இந்திய மக்களும் கடைபிடித்து வருகின்றனர்.

பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகள், மக்கள், குழந்தைகள் என அனைவரும் கொரோனா இருளை நீக்குவதற்கு தங்களது கையில் விளக்குளை ஏந்தி நின்றனர்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் லேடி சூப்பர்ஸ்டார் என வலம்வரும் நடிகை நயன்தாராவும், விளக்கு ஏற்றியுள்ளார். இவர் மின்விளக்குகளை அணைப்பதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும், அவற்றினை அணைத்த பின்பு எடுத்த புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருவதுடன், தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் நயன்தாராவின் அழகை வருணித்தே பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.