தெலுங்கு மற்றும் தமிழ் ஹீரோக்கள், இயக்குனர் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. திரைத்துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போராடப் போவதாக அறிவித்து மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்.ஸ்ரீரெட்டியின் இந்த போராட்டத்தின் மூலம் இத்தனை ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என திரைத்துறையை சேர்ந்த பல பெண்கள் நம்பினர். ஆனால் ஸ்ரீரெட்டியின் அடுத்தடுத்த செயல்கள், அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கியது.நடிகைகள் பலரை பற்றி ஸ்ரீரெட்டி பதிவிட்ட மலிவான போஸ்ட்டுகள் அவர் மீதான மதிப்பை குறைய செய்தது. அவரது மிக மலிவான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள், அவர் மீதான மரியாதையை சுத்தமாக துடைத்தெறிந்துவிட்டது.
முன்பு அவர் எது சொன்னாலும் ஆதரவு அளித்த ரசிகர்கள், தற்போது அவரை கிழி கிழியென கிழித்து வருகின்றனர்.ஸ்ரீரெட்டி தற்போது நடிகைகள் சமந்தா மற்றும திரிஷாவின் உடல் உறுப்புகள் பற்றி மிக மலிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த சமந்தா மற்றும் திரிஷா ரசிகர்கள், ஸ்ரீரெட்டியை வறுத்தெடுத்துவிட்டனர். “தங்களுடைய உழைப்பால் உயர்ந்த அவர்களை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை”, என ஸ்ரீரெட்டியை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.