இந்தியனின் ரத்தத்தில் ஊறிப்போனதுதான் சினிமா! என்னதான் கொரோனாவால் வெளியே தலைகாட்ட முடியாமல் அடைபட்டு கிடந்தாலும் அவனை உயிர்ப்போடு வைத்திருப்பதென்னவோ சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பும் சினிமாக்கள்தான்.
அந்த சினிமா உலகின் ஹாட் பிட்ஸ் இதோ!….
மலையாள சினிமாவின் எப்பவோ ரிட்டயர்டான, சமீபத்தில் ரிட்டயர்டான ஹீரோயின்களிடம் ஒரு புது மேனியா தொற்றிக் கொண்டுள்ளது. அது குறும்படம் எடுப்பது, திரைப்படம் எடுப்பது என்று கேமெராவும் கையுமாக கிளம்பியிருப்பதுதான். ரம்யா நம்பீசன், கனிகா, காவேரி என்று இந்த லிஸ்ட் நீள்கிறது.
(நம்மகிட்ட கால்சீட் கேட்காம இருந்தா சரி! என்று சேட்டன் ஹீரோக்கள் தெறிக்கிறார்கள்.)
முன்னணி ஹீரோயின்கள் நெருங்கிய தோழிகளாக இருப்பது ரொம்ப கஷ்டம்.
அதில் நயனும், சமந்துவும் விதிவிலக்கு. இருவருமே செம்ம நெருக்கம். சமந்து சென்னை வந்தாலோ அல்லது நயன் ஐதராபாத் போனாலோ சந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள். அந்த நெருக்கம்தான் இரண்டு பேரையும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் ஒரே படத்தில் ஹீரோயின்களாக்கி இருக்கிறது.
(விஜய் சேதுபதிக்கு ஒடம்பெல்லாம் மச்சம்தான்)
லட்சுமிமேனனுக்கு கோலிவுட், மோலிவுட் என எங்குமே வாய்ப்பில்லாத நிலையில், சொந்த ஊரான திருச்சூரில் டான்ஸ் ஸ்கூல் துவக்கினார். ‘டான்ஸ் மதி மோளே!’ என்று அவருக்கு வரன் பார்த்து, ஒரு டாக்டர் மாப்பிள்ளையை கிட்டத்தட்ட முடிவு செய்தனர். லட்சுமி மேனனும் டிக் அடித்தார். ஆனால் அந்நேரம் பார்க்க ஒரு தமிழ்ப் படத்தில் வாய்ப்பு கிட்ட, டாக்டருக்கு ‘கொறச்சு வெயிட் செய் டாக்டரேட்டா’ என்று டாட்டா காட்டியிருக்கிறார் லட்சுமி.
(பின்னே எப்ப லட்சுமி திரிச்சு வந்து, எப்ப கல்யாணம் கழிஞ்சு!? ஹய்யடா…)
ஸ்ரீதிவ்யாவுக்கு ஆரம்பமெல்லாம் தமிழ் சினிமாவில் அமர்க்களமாக இருந்தது. பெத்த ரவுண்டு வருவார்! என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாவம் பொண்ணுக்கு இப்ப எந்த வாய்ப்புமில்லை. ‘கிளாமர் ரோலுக்கும் ரெடி’ என்று அவர் சொன்னதற்கு எந்த டைரக்டரும் ரியாக்ஷன் காட்டவுமில்லை. விளைவு ‘நேனு ஒஸ்தானு’ என்று ஆந்திராவுக்கே கிளம்பிவிட்டார் மீண்டும்.
(அட போஸ்பாண்டியுமா கண்டுக்காம விட்டுட்டாரு?)