26.3 C
Chennai
Wednesday, Dec 4, 2024
Do you suffer from stroke for too long sleep S

உங்களுக்கு தெரியுமா அதிக நேரம் தூங்கினால் பக்கவாதம் வருமாம்..

தினமும் இரவு தூக்கம் 9 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால் ஆயுள் காலம் குறையும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிக்க தூக்கமானது முக்கிய பங்கு வகிக்கிறது. சோர்விலிருந்து தப்பிக்கவும், அடுத்தநாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குவதும் தூக்கம் தான். ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேர தூக்கம் அத்தியாவசியமானது.

அதே போல தூக்கத்திற்கு ஓய்வு கொடுக்காமல், பலமணி நேரம் தூங்குபவர்களையும் ஏராளமான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகமாக தூங்குபவர்களை தேர்வு செய்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு இதயநோய் உள்ளிட்ட பல அபாயகரமான நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.Do you suffer from stroke for too long sleep S

இதில், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அதி முக்கிய விஷயம் என்னவென்றால், குறைவாக தூங்குபவர்களுக்கு 11 சதவீதம் இதய நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளதென்றால், தூங்கியே பொழுதை கழிப்பவர்களுக்கு அதைவிட 3 மடங்கு அதிகமாக, அதாவது 33 சதவீதம் இதய நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளதாம்.

இரவு தூங்க செல்வதற்கு முன் காபி, டீ முதலியவற்றை குடிக்கக் கூடாது. குப்புற படுப்பது, மல்லாக்க படுப்பதோ கூடாது. ஒரு சாய்க்க படுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இதய துடிப்பும் நன்றாக வேலை செய்யும். மன நிம்மதியும், நல்ல எண்ணங்களும் நிம்மதியான தூக்கத்தை தரும்.

மேலும் அதிக நேரம் தூங்குவதால் எடை அதிகரிப்பு, தலை வலி, சர்க்கரை நோய், முதுகு வலி உள்ளிட்ட பல வியாதிகள் மனிதனை தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.