செம்பருத்தி கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமில்லாமல் , உடலுக்கும் ஆரோக்கியத்தை தர உதவுகிறது. இயற்கையான முறையில் செம்பருத்தியை வைத்து குளிர்பானம் தயாரிப்பது எப்படி என்பதை இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி – 10 பூக்கள்
எலுமிச்சை – அரை பழம்
வெல்லம் – சிறிதளவு
தண்ணீர் – அரை லிட்டர்
செய்முறை :
- 10 செம்பருத்தி மலர்களை சுத்தப்படுத்தி எடுத்து வையுங்கள். இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
- தண்ணீர் நன்கு சூடாகும் போது அதில் செம்பருத்தி இதழ்களை போடவும். இது நன்கு கருஞ்சிவப்பு நிறமாக மாறும் போது, இறக்கி வைத்துக் கொள்ளலாம்.
- பின்பு நன்கு பழுத்த அரை எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்து விடவும்.
- சிறிது நேரத்தில் சிவப்பாக மாறி விடும். பின்பு இதை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- இந்த தண்ணீரில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- இந்த குளிர்ச்சியான செம்பருத்தி நீரை இனி நீங்கள் பருகலாம்.
அருந்தும் முறை:
காலையில் வெறும் வயிற்றில் 100 மிலி அளவு குடிக்க வேண்டும். பின்பு உணவு உண்ட பின்பு ஒரு மணி நேரத்திற்கு பிறகு 100 மிலி குடிக்கலாம்.
செம்பருத்தி நீரின் மருத்துவ பயன்கள்:
- மூளைக்கு சிறந்த மருந்தாகவும், மூளை சுறுசுறுப்பாகவும் இருக்க இந்த செம்பருத்தி தேநீர் உதவுகிறது.
- இதை தொடர்ந்து குடித்து வந்தால் இதயம் பலமாக இருக்கும்.
- மார்பு வலி குறைந்துவிடும்.
- கருப்பை தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
- ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
- உடலை குளிர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. கண் எரிச்சலை குணப்படுத்த உதவுகின்றது.
- எனவே இந்த செம்பருத்தி நீரை நீங்களும் செய்து குடித்து வாருங்கள் நண்பர்களே!