23.9 C
Chennai
Thursday, Nov 20, 2025
158591289

அதிர்ச்சியில் தமிழகம்! கொரோனாவுக்கு இரண்டாவது பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த சூழலில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் ஒருவர் கொரோனா பாதிப்பால் முதன்முறையாக உயிரிழந்தார்.

தொடர்ந்து இன்று விழுப்புரத்தில் 51 வயது நபர் ஒருவர் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இறந்த நபர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் 411 கொரோனா பாதிப்புகளுடன் கொரோனா பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.