29.5 C
Chennai
Sunday, May 19, 2024
625.0.560.350.160.300.053.800.668

சூப்பர் டிப்ஸ்! தோள்வலி, கீழ் முதுகுவலியை குணமாக்கணுமா?

இன்றைய காலக்கட்டத்தில் வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு சரி பெண்களும் சரி முதுகுவலி அடிக்கடி ஏற்படுவதுண்டு.

இதனை போக்க மருந்துகளை விட உடற்பயிற்சியே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.

அதற்கு கார்டியோ பயிற்சிகள், வலிமைப் பயிற்சிகள் மற்றும் நெகிழ்வுப் பயிற்சிகள் செய்வதற்கு கெட்டில்பெல்ஸ் மிகச்சிறந்தவை என்று கருதப்படுகின்றது.

அந்தவகையில் கெட்டில்பெல்ஸை கொண்டு முதுகுவலி, தோள்வலியை எப்படி குறைக்கலாம் என பார்ப்போம்.

பயிற்சி
625.0.560.350.160.300.053.800.668

முதலில் இரண்டு கெட்டில்பெல்கள்( Kettlebell row )இரண்டையும் உங்கள் கால்களுக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு முழங்கால்களையும் மடக்கி, இடுப்பை பின்புறமாக கொண்டு செல்லவும்.

வயிற்று தசைகளை உள்ளிழுத்தவாறே இரண்டு கைகளாலும் கெட்டில்பெல்களை தூக்கவும்.

இப்போது உங்கள் முழங்கையின் எல்போ பகுதி பின்பக்கம் இழுத்தவாறு உடலோடு ஒட்டி இருக்க வேண்டும்.

பின்னர் மெதுவாக குனிந்து முழங்காலுக்கு கீழே இறக்கிப் பிடிக்கவும். இதேபோல் 12 முதல் 15 வரை திரும்ப செய்ய வேண்டும்.

பலன்கள்
  • எடையை வயிறு மற்றும் மார்பில் அழுத்தம் கொடுத்து இழுக்கும்போது இடுப்பு, வயிறு மற்றும் பின்புற தசைகள் வலுவடைகின்றன.
  • தோள்பட்டைகள் மற்றும் கைகளில் உள்ள தசை நாண்கள் நீட்சியடைகின்றன.
  • தோள்பட்டையில் உள்ள பந்துகிண்ண மூட்டுக்கள் வலுவடைவதால் தோள்வலி, கீழ்முதுகுவலி போன்றவற்றுக்கு நல்ல தீர்வாகிறது.
  • அடிவயிற்று தசைகள் நன்றாக உள்ளிழுக்கப்படுவதால் தட்டையான வயிறைப் பெற முடிகிறது.