cd0d634c1a9a2787

அதிர வைக்கும் ஆய்வு! நெருங்கி நின்று பேசினாலும்.. மூச்சு விட்டாலும் கூட கொரோனா பரவுமாம்..

நெருக்கமாக நின்று பேசினாலும், மூச்சுவிட்டாலும்கூட கொரோனாவைரஸ் தொற்று பரவுமாம்.. இப்படி ஒரு பகீர் ஆய்வுத் தகவல் இப்போது வெளியாகி உள்ளது!

மனித குலத்திற்கே ஆபத்தாக வந்திருக்கும் இந்த கொரோனாவைரஸ் பற்றி நித்தம் ஒரு தகவல், நித்தம் ஒரு அறிகுறி என்று தகவல்கள்தான் அதிகமாக வெளியாகின்றன. தீர்வுகள் தெளிவாக கிடைக்கவில்லை. இதனால்தான் உயர்ப்பலியையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதற்கான மருந்தை கண்டுபிடிக்க லட்சக்கணக்கான டாக்டர்கள் அல்லும் பகலும் போராடி வரும்நிலையில்தான், கொரோனாவைரஸ் பரவல் பற்றின ஆய்வுகளும் சூடுபிடித்தபடி உள்ளன. புதுப் புதுத் தகவல்களும் வெளியாகின்றன.

இருமல், சளி, காய்ச்சல், என்ற அறிகுறிகள் முதலில் சொல்லப்பட்டது.. பிறகு வாசனையை நம்மால் நுகர முடியாமல் போனாலோ அல்லது நாக்கில் ருசி தெரியாமல் போய்விட்டாலோ அதுவும் கொரோனாவைரஸ் தொற்றுக்கான அறிகுறி என்றும் விஞ்ஞானிகள் சொன்னார்கள். எந்த அறிகுறியும் இல்லாமலும் கூட நோய்த் தொற்று வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.cd0d634c1a9a2787

இப்போது இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளனர்.. கொரோனா வைரஸ் பாதித்தவர் வேறு நபருடன் நெருக்கமாக அருகில் நின்று பேசினால்கூட நோய் பரவுமாம்.. அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் இதை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய அகாடமி ஆப் சயின்ஸ் நடத்திய இந்த ஆய்வில், நெருக்கமாக அருகில் நின்று மூச்சு விடுதல் மூலமும், பேசுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தும்மல் மூலம் வெளிவரும் துளிகள் 20 – 30 வினாடிகளில் தரையை அடைந்து விடும்.. ஆனால், இதன் நுண் துளிகள் காற்றில் நீண்ட நேரம் இருக்கும்…. அதனால், அந்த இடத்தில் இருக்கும் பலருக்கும் இது பரவ வாய்ப்பும் அதிகம். இதுதொடர்பாக அகாடமியின் தலைவர் டாக்டர் ஹார்வி பைன்பெர்க், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை வெளிப்படுத்தி உள்ளார்.. இதையடுத்து, அமெரிக்கா முழுவதும் மாஸ்க்குகளை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்துவது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருகிறது.

கைகுலுக்கி கொள்வதும், கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவதும், வெளிநாட்டுக்காரர்களின் இயல்பான பழக்கவழக்கம்.. அதனால் இப்போதைய இந்த ஆய்வின் தகவல் உலக மக்களுக்கே ஒரு அதிர்ச்சிதான்!