24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
15858373

அமலா பால் உருக்கம் !! மன அழுத்தத்தால் என் அம்மாவை இழக்க இருந்தேன்

மைனா, தலைவா, ஆடை போன்ற படங்களில் நடித்துள்ளவர், அமலாபால். இவரது தாய் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான ஒரு கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், பெற்றோரின் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.பெற்றோரின் இழப்பு பெரிய இழப்பு ஆகும்.என் தந்தை புற்றுநோயால் இறந்த பிறகு என் வாழ்க்கையில் புதிய விஷயங்கள் தெரிந்தன. அதன்பிறகு நான் ஒரு பெரிய உலகில் வாழ்கிறோம்
அதில் நிறைய சமூகங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டேன்.

தினமும், மக்கல், மகிழ்ச்சி, பொருட்கள் விருது என பலவிதமாக தேடல்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறோம். இதில், நாம் எப்போது நம்மைப் பற்றி யோசிப்போம். முக்கியமாக பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். குடும்பம், குழந்தைகள், கணவர் என மற்றவர்களுக்காக
வாழ்ந்து நம் அம்மாக்கள் தமது வாழ்க்கை தொலைக்கிறார்கள். தனக்காக வாழவும் அம்மாக்களுக்கு கற்றுத்தர வேண்டும். தீவிர மன அழுத்தத்தில் இருந்தபோது, என்னையும் என் தாயையையும் நான் இழக்க இருந்தே. ஆனால் இப்போது நான் பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் பறக்கத் துவங்கியுள்ளேன்.எனது சகோதரனுக்கும் மிக நன்றி என தெரிவித்துள்ளார்.15858373