keerthi sures

கல்யாணத்துக்கு ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்.. இவர்தான் மாப்பிளையாம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் தற்போது விபரீதமான முடிவை எடுத்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

பாம்பு சட்டை என்ற படத்தில் நடித்திருந்தாலும் ரஜினி முருகன் படம் தான் கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த படம், கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் முன்னணி கதாநாயகியாக வளரும் அளவுக்கு ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதை தொடர்ந்து விரைவிலேயே தளபதி விஜய்யுடன் ஜோடி போட்டு மற்ற நடிகைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார். அப்படியே தெலுங்கு சென்றவருக்கு அந்த பக்கமும் இதே வளர்ச்சிதான்.

ஒரே ஒரு இந்தி படத்தில் நடிக்க ஆசைப்பட்டு தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து ஏதோ நோய் தாக்கியது போல மாறி விட்டார் கீர்த்தி சுரேஷ். கடைசியில் அதுவே அவருக்கு வினையாக அமைய பாலிவுட் பட வாய்ப்பு ஊத்திக் கொண்டது.

அதுமட்டுமல்லாமல் தமிழிலும் தெலுங்கிலும் பெரியளவு வாய்ப்புகள் இல்லை. கைவசம் மகேஷ் பாபுவுடன் ஒரு படம் மட்டும் தான் இருக்கிறது. இதனால் தற்போது கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துக்கு பச்சை கொடி காட்டி விட்டதாக தெரிகிறது.

keerthi sures

உடனுக்குடன் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிய குடும்பத்தினர், பிரபல பிஜேபி கட்சியில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரின் மகனை பேசி முடித்து உள்ளதாக தெரிகிறது.

கீர்த்தி சுரேஷும் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும், இந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பற்றி தெரிவித்துள்ளார்.