24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.500.560.350.160.300.053.800.9 1

பிரபல நடிகரின் மகனுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்?

கொரோனா வைரஸ் நோய் தோற்று உலகம் முழுக்க மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதிலிருந்து நிரந்தர விடுதலை எப்போது என்பதே பெரும் சவாலாக உள்ளது. இதனை எதிர்த்து உலக நாடுகள் மிகவும் போராடி வருகின்றன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டில் தனிமைப்பட்டுத்தப்பட்டுள்ள செய்திகளை நாம் அனுதினமும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தமிழ், மலையாளம் சினிமா படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி லண்டனில் இருந்து வந்துள்ள தன் மகனை குடும்ப மருத்துவரின் அறிவுறுத்துதலின் படி தன் ஃபிளாட் எடுத்து தங்கவைத்துள்ளாராம்.

விசயம் என்னவெனில் அவரின் மகன் வந்துள்ள விமானத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாம். ஆனால் அவரின் மகனுக்கு எந்தவித அறிகுறியும் இல்லையாம். இருந்தாலும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ப்படி ஒரு முடிவெடுத்துள்ளாராம்.

மேலும் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

சுரேஷ் கோபி தமிழில் சரத்குமாருடன் சமஸ்தானம், அஜித்துடன் தீனா, விக்ரமுடன் ஐ, போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.