கொரானா பாதிப்பால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட நாடு சீனா தான். இதனால் பொருளாதார ரீதியாக பெரிதும் அடி வாங்கியிருந்த சீனா தற்போது அதிலிருந்து உடனடியாக பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது பல நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சீனாவில் உள்ள வவுஹான் எனும் நகரத்தில் இருந்து தான் தற்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தொடங்கியது. கிட்டத்தட்ட 150 நாடுகளை மொத்தமாக தாக்கி பொருளாதார ரீதியாகவும் உயிர் ரீதியாகவும் பல மடங்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த வைரஸ்.
ஆனால் தற்போது சீனா பலமடங்கு முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சீனா தற்போது இயல்பு நிலையை அடைந்து வருகிறது. பொதுமக்கள் சர்வசாதாரணமாக தற்போது சீனாவில் வலம்வர தொடங்கிவிட்டனர்.
கொரானா வைரஸால் தற்போது சீனாவுக்கு பொருளாதார ரீதியாக பல மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இருந்தும் சீனாவிடம் மருத்துவ உதவிகளை கேட்டு வருகின்றனர். ஏன் நம் இந்தியாவுக்கு கூட பல வகையான சரக்குகளை அனுப்பி வைத்துள்ளது சீனா.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல முன்னணி நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவே கொரானா வைரஸை உலகம் முழுவதும் பரப்பிவிட்டதாக சீனா மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவின் முன்னணி நிறுவனமான ஆப்பிள், ஹூண்டாய் போன்ற தொழிற்சாலைகள் பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து செயல்பட தொடங்கி விட்டார்களாம். பல வருடங்களுக்கு முன்பு சீனாவின் ராணுவ அதிகாரிகள் இருவர் மற்ற நாடுகளை ராணுவ பலத்தால் வெல்வது அரிது எனவும், பொருளாதார ரீதியாக மட்டுமே வெற்றி சாத்தியம் எனவும் குறிப்பு எழுதி விட்டுச் சென்றதாக அமெரிக்கர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அந்த நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் கொரானா வைரஸை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவ வசதிகள் இல்லாததால் தற்போது அனைத்து நாடுகளுமே சீனாவிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது வர்த்தகத்தில் சுமார் 417 சதவீதம் அதிகரித்துள்ளது.
இன்னும் ஓரிரண்டு வாரங்களில் சீனா பழைய நிலைமைக்கு திரும்பி விடும். ஆனால் மற்ற நாடுகளின் கதி. இனி எல்லா விஷயத்திற்கும் சீனாவை நம்பி இருக்க வேண்டிய அவசியம் அளவுக்கு அதிகமாக ஏற்படும் எனவும் புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன. மற்ற நாடுகளை கொரானா வைரசால் மருத்துவ ரீதியாக தோல்வியடைய வைத்து முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதில் சீனா அரசு குறிக்கோளாக இருப்பதாக தெரிகிறது.
இனி சீனாவின் பிடியில் தான் மொத்த உலகமும் என்றால் ஆச்சரியம் இல்லை.