23.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
1585625523

மீண்டும் உங்கள் இல்லங்கள் தோறும் பிக்பாஸ் – விஜய் டிவி!

கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் முழுவதும் முடங்கியுள்ளன. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டு 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறாததால் அடுத்த எபிசோடுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ள டிவி சேனல்கள் தற்போது தங்களது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பழைய டிவி சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன.

அந்தவகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்கை மறுஒளிபரப்பு செய்யவுள்ளனர். நேற்று இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். இதனை கண்ட ரசிகர்கள் போட்டதையே திருப்பி போடாதீங்க… எடிட்டிங்கில் நீக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்புங்கள் செமயா இருக்கும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.