தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் சேரன். இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் சிறந்த நடிகரும் ஆவார். சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்து உள்ளது. இவர் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கி, நடித்து உள்ளார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சேரன் உடைய படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.
நண்பர்களே புதிய முயற்சியாக wall Poster you tube channel ஒன்று துவங்கியிருக்கிறோம்.. பல்வேறு இளைஞர்களின் திறமையை வெளியே கொண்டுவருவதற்காக… முதலில் தினமும் செய்திகளோடு விரைவில் துவங்குகிறோம்.. தொடர்ந்து பன்முகத்தன்மையோடு வளரும்… ஆதரவை கொடுத்து வளர்க்கவும்#wallposter #news pic.twitter.com/H8i9OoNXV7
— Cheran (@directorcheran) March 30, 2020
சேரன் அவர்கள் கடைசியாக திருமணம் என்ற படத்தை தான் இயக்கி இருந்தார். அதற்கு பின் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயதில் அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் 50 நாட்களுக்குள்ளேயே எலிமினேட் செய்யப்படுவார்கள்.
ஆனால், சேரன் அவர்கள் தன்னுடைய விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தான் 90 நாட்கள் வரை பயணம் செய்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சேரன் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார். இந்நிலையில் சேரன் அவர்கள் புதிதாக யூடியூப்பில் சேனல் ஒன்றை உருவாக்கினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பது, நண்பர்களே வணக்கம். புதிதாக நான் யூ-டியூபில் சேனல் ஒன்று உருவாக்கி இருக்கிறேன். அது அந்த சேனலின் பெயர் வால் போஸ்டர்(Wall Poster). இந்த சேனலுக்கு உங்களுடைய ஆதரவு எனக்கு தேவை. இப்போது இது நியூஸ் சேனல் ஆக தான் துவங்குகிறது. மேலும், இது தொடர்ந்து பன்முகத் தன்மை கொண்டதாக மாறும்.
வால் போஸ்டர் சேனலை பார்க்க அதன் லிங்க் bio வில் இணைந்திருங்கள் என்று கூறினார். தற்போது இந்த டிவிட்சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒருவேளை கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தான் இந்த வால் போஸ்டர் நியூஸ் சேனல் உருவாக்கி இருப்பாரோ? என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். சமீபத்தில் தான் வனிதா வி என்ற சேனை தொடங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது சேரன் அவர்கள் ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. சேரன் இயக்கும் இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதியும், சிம்புவும் இணைந்து நடிப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.