பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியல் நாயகி ஷிவானியின் நடன காட்சிகள் வெளியாகி லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகின்றது.
ஷிவானிக்கு சினிமா நடிகைகளைப் போலவே ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். வித விதமான படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் இவரது ஃபோட்டோக்களில் லைக்ஸ் மழை பொழியும்.
இந்நிலையில் தற்போது ஷிவானியின் டான்ஸ் காணொளி ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
’மாஸ்டர்’ படத்தில் வரும் ‘வாத்தி கமிங் ஒத்து..’ பாடலுக்கு தான் அவர் நடனம் ஆடியுள்ளார். இந்த காணொளியை தற்போது வரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.