கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும், இருபத்தியோரு நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசின் உள்ளாட்சித் துறை மூலமாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை என்பதால், ஏற்கனவே உள்ளாட்சித் துறையில் இருக்கும் சுகாதாரத் துறை பணியாளர்களைக் கொண்டு, இந்த பணிகளை முழுமையாகச் செய்ய முடியவில்லை.
இதனால், மாநகாராட்சிப் பகுதிகளில், ட்ரோன்களில் கிருமி நாசினியை வைத்து, அதன் மூலம் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்ப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகர் அஜித் ஆலோசனை வழங்கிய தக்ஷா என்ற அமைப்பைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்கள் பலர், இந்த கிருமி நாசினி தெளிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.