amil News rose water for face
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! சருமத்திற்கு மென்மையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்………

ரோஸ் வாட்டர்

முகம் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும் போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

ரோஸ் வாட்டர் ப்ரிட்ஜில் வைத்து, அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.

amil News rose water for face

தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாகவும் காட்டும்.

வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.

கஸ்தூரி மஞ்சள் மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி  வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில்  குணமாகும். கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள்,  மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும். கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும். சாதாரண  மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப்  பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.

Related posts

உலர் சருமத்திற்கு உகந்த பேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும வறட்சியைத் தடுக்கும் பழ ஃபேஸ் பேக்குகள்!

nathan

ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக்!

nathan

வாயைச் சுற்றியுள்ள சரும கருமைகளுக்கு சில இயற்கை ஃபேஸ் மாஸ்க்…

nathan

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கான 6 எளிய வழிகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

கரும்புள்ளி, முகப்பரு, சுருக்கங்கள், கருமை போன்றவற்றைப் போக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க.!

nathan

ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது தெரியுமா?

nathan

முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

nathan

நீங்க கருப்போ சிகப்போ ஆனா பார்க்க பளபளன்னு இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan