உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும்.
முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க :
* மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர முடிகள் உதிர்ந்து விடும்.
* சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேன் கலந்து முகத்தில் தடவி 10 -15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.
* முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க: ஹேர் ரிமூவிங் கிரீம், வாக்சிங், ப்ளீச்சிங், எலக்ட்ரோலிசிஸ், லேசர் சிகிச்சை போன்ற மருத்துவ முறையும் மேற்கொள்ளலாம்.