25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
crub face 600
முகப் பராமரிப்பு

கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…..

சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கத்திர்களின் தாக்கத்தினால், சருமத்தின் நிறமானது மாறிவிடுகிறது. அதிலும் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சூரிய தாக்கத்தினால், சருமமானது கருமையாகிவிடுகிறது. ஆனால் சரியான சரும பராமரிப்பை மேற்கொண்டு வந்தால், சூரியக்கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.

இப்போது சூரியக்கதிர்களினால் சருமத்தின் நிறம் மாறாமல் இருப்பதற்கு எந்த மாதிரியான பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதிலும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதன் படி பின்பற்றி வந்தால், சருமத்தை சூரியனிடமிருந்து பாதுகாக்கலாம்.

முற்றிலும் மூடவும்
சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமானால், எப்போதும் வெளியே செல்லும் போது, சூரியக்கதிர்கள் படாதவாறு, சருமத்தை மூடிக் கொண்டு செல்ல வேண்டும். மேலும் மறக்காமல், சன் ஸ்க்ரீன் லோசன் தடவி செல்ல வேண்டும்.

ஸ்கரப்

சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, ஸ்கரப் செய்வது சிறந்த வழியாகும். அதிலும் எப்போதெல்லாம் வெயிலில் சுற்றிவிட்டு, வீட்டிற்கு வந்தாலும், ஸ்கரப் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும். ஒருவேளை தினமும் செய்ய முடியாவிட்டால், வாரம் ஒருமுறையாவது தவறாமல் செய்து வர வேண்டும்.crub face 600

கிளின்சர்
ரோஸ் வாட்டர், பால், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எலுமிச்சை கொண்டு சருமத்தை தினமும் பராமரித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம். மேலும் இந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் சருமத்தில் உள்ள கருமை நீங்குவதுடன், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

வாக்சிங்
சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளைப் போக்க உதவும் ஒரு முறை தான் வாக்சிங். இந்த முறையை கை மற்றும் கால்களில் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதுடன், சருமத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக் கூட ஒரு அருமையான சரும கருமையைப் போக்க உதவும் வழியாகும். அதிலும் மஞ்சள், முல்தானி மெட்டி, பால், எலுமிச்சை சாறு போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் ஃபேஸ் பேக்கை சருமத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் அழகு பராமரிக்கப்படுவதுடன், சருமத்தில் உள்ள கருமை போய்விடும்.

Related posts

உலர் சருமத்திற்கு உகந்த பேஸ் பேக்

nathan

அடர்த்தியான புருவங்களைப் பெற சில டிப்ஸ்

nathan

த்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்

nathan

வீட்டில் உள்ள அற்புதமான சில பொருள்கள் கொண்டு கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க முடியும்!…

sangika

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!

nathan

மின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ் வீட்டிலேயே தயாரியுங்கள்!

nathan

வீட்டிலேயே கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க சில வழி.

nathan

முகம் உடனடியாக ஜொலிக்க இந்த 5 வழிகளை யூஸ் பண்ணுங்க !!

nathan