தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி – 300 கிராம்
சிக்கன் – 1 கிலோ
வெங்காயம் – 4
மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மசாலா தூள் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
முந்திரி – 50 கிராம்
எலுமிச்சை சாறு – சிறிதளவு
பச்சைபட்டாணி – 100 கிராம்
நெய் – தேவையான அளவு
salt – தேவையான அளவு
செய்முறை விளக்கம் : அரிசியை கழுவி ஊறவைத்து முக்கால் பாகத்திற்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பச்சைபட்டாணியையும் உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு வேகவைத்து எடுக்கவும். வேகவைத்த சிக்கனோடு தயிர், மஞ்சள், மிளகாய்த்தூள், மசாலா தூள், சீரகம் இவற்றை சேர்த்து கலந்துகொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து சிக்கன் கலவையை அதில் போட்டு வறுத்துக்கொள்ளவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்க்கவும். மற்றோரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் வெங்காயத்தை வறுத்து எடுக்கவும். இப்பொது வேகவைத்த அரிசி, பச்சைபட்டாணி இரண்டையும் சிக்கன் கலவையில் போட்டு மெதுவாக கிண்டவும். மேலே வறுத்த வெங்கயத்தை போட்டு மூடவும். சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.