31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

பெண்களுக்கு முகம் அழகு மட்டுமல்ல, அது அவர்களின் தன்னம்பிக்கையின் சாட்சி. சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும்.

அவர்கள் உப்பை பயன்படுத்தி கரும்புள்ளிகளை நீக்க முடியும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. ஒரு முறை முயற்சித்துப் பார்ப்பது தப்பில்லை. இதோ கீழே விளக்கம்

1 மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

2 மேசைக்கரண்டி உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து, ஈரமான முகத்தில் அவற்றைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.

3. தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 மேசைக்கரண்டி தேனில், 2 மேசைக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

4. ஒரு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி கடலை மாவு, 2 மேசைக்கரண்டி பால் மற்றும் 1 மேசைக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் தேய்த்து கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Related posts

பத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா?

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! “மரு”வை அகற்ற சுலபமான வழி!

nathan

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan

சூப்பர் டிப்ஸ் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும் சர்க்கரை பேஸ் பேக்!!!

nathan

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

sangika

முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிர மஞ்சள் ஃபேஷ் பேக்…

nathan

பார்லர் போறீங்களா?

nathan

கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய

nathan

உங்களுக்கு சேலை கட்டத் தெரியாத?அப்ப இந்த வீடியோவைப் பாருங்கள்!

nathan