26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
gkjg
அசைவ வகைகள்அறுசுவை

வாளைமீன் குழம்பு ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் அப்புறம் கார்த்திகை மாதம் எப்போது வருமென்று காத்து இருப்பீர்கள்.

கார்த்திகை மாதத்தில் தான் வாளைமீன் சீசன்.நம்மில் பலருக்கும் வாளைமீன் கருவாட்டை வாங்கி மொறு மொறுவென்று வறுத்துத் தின்றுதான் பழக்கம்.அதே வாளை மீனை புளி

சேர்க்காமல்,தேங்காய் அரைத்து விட்டு குழம்பு செய்து,அதற்கு,வாளைமீன் தித்திப்பு என்று பெயர் வைத்துக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள் தமிழகத்தில்.பயப்பட வேண்டாம், ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள் அப்புறம் கார்த்திகை மாதம் எப்போது வருமென்று காத்து இருப்பீர்கள்.

தேவையான பொருட்கள்.

வாளைமீன் ½ கிலோ
சின்ன வெங்காயம் ¼ கிலோ
தக்காளி – 2
பச்சை மிளகாய் 12
தேங்காய் அரை மூடி
இஞ்சி,பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்.
சோம்பு 2 டீஸ்பூன்
கசகசா 2 டீஸ்பூன்
கடுகு ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய்
உப்பு
gkjg
செய்முறை.

வாளை மீனை நன்றாக சுத்தம் செய்யுங்கள்,தலையை தூரப்போடுங்கள்
அடுப்பில் சட்டியை வைத்து,அது சூடானதும் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு,கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். இரண்டு பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிப் போட்டு வதக்குங்கள்.
இப்போது, பொடியாக வெட்டிய சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள்.

எண்ணெய் பிரிகையில் இஞ்சி,பூண்டு பேஸ்ட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.தக்காளியை பொடியாக வெட்டி சேர்த்து,மேலும் சிறிது உப்புச் சேர்த்து மேலும் வதக்குங்கள்.அது வதங்கும் நேரத்தில், மீதமுள்ள 10 பச்சை மிளகாய்,கசகசா,சோம்பு சேர்த்து மையாக அரையுங்கள்.

இந்தக் கலவையை கொட்டி கிளறிவிடுங்கள்.இரண்டு நிமிடத்திற்கு பிறகு மேலும் சிறிது உப்புச் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடுங்கள்.இப்போது , கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் வாளை மீனைச் சேர்த்து , இன்னொரு 5 நிமிடம் கொதிக்க விட்டால், புளி சேர்க்காத வாளை மீன் குழம்பு ரெடி.
இது,சோற்றுக்கு மட்டுமல்ல, இட்லி மற்றும் தோசைக்கும் செம காம்போவாக இருக்கும்.

Related posts

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

nathan

சண்டே மட்டன் செய்யலாமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் கிச்சன் மட்டன் ரெசிப்பி. செய்து அசத்துங்கள்.

nathan

யாழ்ப்பாண முறையிலான ஆட்டிறைச்சி குழம்பு சமையால்

nathan

ஆட்டு குடல் சாப்பிடுவதால் ஏதேனும் நன்மைகள் உண்டா?

nathan

ஆத்தூர் மட்டன் மிளகு கறி

nathan

சூப்பரான பப்பாளி ஜூஸ் எப்படி செய்வது?…..

sangika

கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி

nathan

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan

உருளைக்கிழங்கு மட்டன் மசாலா செய்வது எப்படி

nathan