27.6 C
Chennai
Wednesday, Jul 9, 2025
regregf
அழகு குறிப்புகள்

எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் அழகு தரும் நலங்கு மாவு…

நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இன்றைய இளைஞர்களின் அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது முகப் பரு. முகப் பருவிற்கு ஏராளானமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் தீர்வாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

இவை அனைத்தும் செயற்கை வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவற்றை உபயோகிக்கும் போது அவை சருமத்தில் பக்க விளைவை உண்டாக்கக் கூடும். இயற்கைப் பொருட்களால் தயார் செய்யப்படும் நலங்குமாவே இதற்கு சரியான தீர்வாகும்.

நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.
gfrsdgfdh
முகப்பருவிற்கு அடுத்ததாக வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு நிறைய பேர் செயற்கை வாசனைப் பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர்.

கையிடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கிவிடும். நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதனை உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை என்பது நன்மை தரும் செய்தி.

பிறந்த குழந்தைகளுக்கு நலங்குமாவினை தேய்த்து குளிக்க வைப்பதால் குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் கொச்சை வாசனை நீங்கி நாள் முழுவதும் நல்ல வாசனையோடு திகழ்வர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
regregf
தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு – 50 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
வசம்பு – 50 கிராம்
ரோஜா மொக்கு – 50 கிராம்
சீயக்காய் – 50 கிராம்
அரப்புத் தூள் – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம்
விலாமிச்சை வேர் – 50 கிராம்
நன்னாரி வேர் – 50 கிராம்
கோரைக் கிழங்கு – 50 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
பூவந்திக்கொட்டை – 50 கிராம்

செய்முறை:

கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும்.

பின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.
dwqrdeqf
குறிப்பு

நலங்கு மாவு தயார் செய்ய தேவையான மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.

ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்காமல் மற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ளலாம்.

பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.

Related posts

அழகான நகங்களைப் பெற

nathan

காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட களிம்பு ரொம்ப நாளாக மறையாமல் இருக்கும் தழும்புகளை மறைய செய்யும்

nathan

வெயில் காலத்தில் கண் எரிச்சலை போக்க டிப்ஸ்

nathan

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

கல்யாணப் பொண்ணு டல்லா தெரியறீங்களா? இதோ முன்கூட்டியே நீங்க செய்ய வேண்டிய குறிப்புகள் முயன்று பாருங்கள்!!

nathan

பெண்களுக்கு நாற்பது வயதில் இனிக்கும் தாம்பத்திய வாழ்க்கை

nathan

சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்த சூப்பர் டிப்ஸ்…

nathan

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

முடியின் வளர்ச்சி நேராகவும், நீளமாகவும் உள்ளதென்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் நண்பர்களே!…

sangika