உடல் வெப்பத்தைத் தணிக்கவும்,
ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் ஒரு முக்கிய பொருள். ஆனால் தேங்காய் எண்ணெய்யை வைத்து அழகையும் பராமரிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
மாய்ஸ்சரைஸர் : வறண்ட சருமம் இருப்போர் தேங்காய் எண்ணெயை முகம், கை கால்களில் தடவிக் கொள்வதால் சருமம் வெடிக்காது.
சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் : கை கால்களில் தேங்காய் எண்ணெயை அப்ளை செய்தால் சூரிய வெளிச்சம் நேரடியாக படாது. அதேசமயம் ஈரப்பதத்தையும் அளிக்கும்.
கண்களுக்கான கிரீம் : கண்களுக்குக் கீழ் கருமை, வீக்கம் என அழகைக் கெடுக்கும் வகையிலான பிரச்னைகளுக்கு ஒரு துளி தேங்காய் எண்ணெயை கண்களுக்குக் கீழ் தேய்த்து மசாஜ் செய்து அப்படியே விட்டால் கண்கள் இழந்த பொலிவைப் பெறும்.
மேக்அப் ரிமூவர் : தினமும் மேக் அப் அப்ளை செய்கிறீர்கள் என்றால் தேங்காய் எண்ணெயை காட்டனில் முக்கி, ரிமூவ் பண்ணலாம்
ஃபேஸ் மாஸ்க் : தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் அல்லது பேக்கிங் சோடா ஏதேனும் ஒன்றை கலந்து நன்குக் கலக்கி முகத்தில் தேய்த்து 7 – 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும்.