31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

பெண்கள் கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையத்தை போக்கும் அற்புத குறிப்புகள்…!!

பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்களின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.

தக்காளியை அரைத்து கருவளையத்தின் மேல் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உருளைகிழங்கு சாறின் மூலமும் கருவளையத்தை நீக்கலாம்.

இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.

உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.

எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.

தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும். சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து, அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Related posts

பெண்கள் அதிகமாக விரும்பும் செயற்கை நகைகள்!

nathan

இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

nathan

காலைல எழும்பினதும் தினமும் இவற்றை செய்து வாருங்கள் உங்களை விட அழகாக யாரும் இருக்க மாட்டார்கள்!…

sangika

சென்சிடிவ் சருமத்தினருக்கான ஃபேஸ் ஸ்கரப்

nathan

amazing beauty benefits lemon அழகா ஜொலிக்கணுமா? எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.

nathan

கூந்தலுக்கு ஆரோக்கியமாகும் வழிகள்,beauty tips hair tamil language

nathan

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

nathan

வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

nathan

அழகு உங்கள் கையில்

nathan