30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்

உங்களை பிரஷ்ஷாக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க…

திருவிழா, பண்டிகை, திருமண விழா இப்படி வந்துவிட்டாலே போதும் வேலையும் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் களைப்பும் அதிகமாக இருக்கும்.

இந்த மாதிரியான நேரங்களில் நம் முகத்தை பிரஷ்ஷாக வைத்திருப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கும். ஓடி ஓடி வேலை செய்யும் நேரத்தில் சரும பராமரிப்புக்கு என்று நேரம் ஒதுக்குவது முடியாத காரியம்.

அந்த நேரத்தில் ப்யூட்டி பார்லர், சலூன் நிலையம் என்று தேடி அலைஞ்சுகிட்டு இருக்க முடியாது. அதற்காகத் தான் உங்களை நாள்தோறும் ப்ரஷ்ஷாக வைப்பதற்கு நாங்கள் சில டிப்ஸ்களை தருகிறோம். அதுவும் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே எப்படி பொலிவை அதிகரிப்பது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி அழகாக மாறுங்கள்.


எண்ணெய் சருமம் நீங்க…

தேவையான பொருட்கள்:

* 4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு

* 2 டேபிள் ஸ்பூன் தேன்

* 3 டேபிள் ஸ்பூன் சுண்டக்காய்ச்சிய பால்

* 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி கொள்ளுங்கள். பிறகு அதை ஆற வைத்து கொள்ளுங்கள்.

* அதில் ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* அதில் கோதுமை மாவை கலந்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.

* இப்பொழுது முகத்தை கழுவி விட்டு, முகத்தில் இந்த மாஸ்க்கை தடவுங்கள்.

* நன்கு உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கரும்புள்ளிகளைப் போக்க…

தேவையான பொருட்கள்:

* 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு

* 3 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பெளலை எடுத்து அதில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள்

* அதனுடன் க்ரீம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்

* பிறகு அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்

* இதை முகத்தில் தடவி காய விடுங்கள்

* பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை தினசரி செய்து வந்தால் இரண்டே வாரங்களில் நல்ல பலனை நீங்கள் காணலாம்.

சென்ஸிட்டிவ் மற்றும் அரிப்பான சருமம்…

தேவையான பொருட்கள்:

* 4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு

*2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி

* 2-3 டேபிள் ஸ்பூன் பால்

* 2 டேபிள் ஸ்பூன் தேன்

* 1 கப் தண்ணீர்

* 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் இதழ்கள்

* 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

* ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அதில் ரோஜாப் பூ இதழ்கள், ஆரஞ்சு தோல் பொடி சேர்க்கவும். பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

* மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடுபடுத்துங்கள். அதில் தேன் சேர்த்து கொள்ளுங்கள்.

* இதை ஒரு பெளலிற்கு மாற்றி அதில் 2 டீ ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* அதில் கோதுமை மாவை சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்

* இதை முகத்தில் தடவி 15 – 20 நிமிடங்கள் காய விடவும்

* பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

கருமையை போக்குதல்…

தேவையான பொருட்கள்:

* 4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு

* 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர்

* இப்பொழுது இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்

* நல்லா கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்

* இதை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் காய வைக்கவும்.

* பிறகு குளிர்ந்த தண்ணீரை கொண்டு கழுவுங்கள். சருமத்தில் உள்ள கருமை நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.

மேற்கண்ட 4 கோதுமை பேஸ் மாஸ்க்களும் உங்கள் முகத்திற்கு சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. மேலும் இதில் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. முயற்சி செய்து பாருங்க புதுப்பொலிவு பெறுங்க.

Related posts

ஆயிலி ஸ்கின் பிரச்னை.. ஆரஞ்சை 3 விதமாக பயன்படுத்தலாம்.

nathan

சரும சொர சொரப்பை போக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

sangika

குதிகால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்!..

sangika

பெண்களே உங்கள் கைகளே சொல்லும் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று ?படிங்க!

nathan

பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு! 2022-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்?

nathan

இ.றுக்கமான உடை… ம.னைவியை கொன்ற க.ணவன் எழுதிய 11 பக்க கடிதம்!!

nathan