30.2 C
Chennai
Wednesday, Nov 20, 2024
hjkjk
அழகு குறிப்புகள்

சருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க அட்டகாசமான டிப்ஸ்

சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை.

சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது எனப் பற்பல பணிகளை மேற்கொள்கிறது. உடலை ஒரு போர்வையாகப் போர்த்தி இருக்கும் சருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க அட்டகாசமான டிப்ஸ்களை வழங்குகின்றனர் தோல் சிகிச்சை மருத்துவர் ரத்னவேல், சித்த மருத்துவர் வேலாயுதம், இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

வியர்வை

மனிதனின் உடலில் இருந்து ஒரு நாளைக்குச் சராசரியாக அரை லிட்டர் வியர்வை வெளியேறும். உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பதற்குத்தான் வியர்வை சுரக்கிறது. அது வரும் பாதையில் அடைப்பு இருந்தால், அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சின்னச் சின்னக் கொப்பளங்கள் தோன்றும். இதுதான் வியர்க்குரு.

வியர்க்குரு பிரச்னையில் இருந்து விடுபட…

தினமும் குறைந்தது இரண்டு முறை குளிக்கவேண்டும். கேலமைன் (calamine)லோஷன் தடவுவது நல்லது.
bvvcbn

நல்ல காற்றோட்டமான அறையில் இருந்தால், தோலில் ஏற்படும் அடைப்பு சரியாகிவிடும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்க்ரீன் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்துவது நல்லது.

இளம் சூடான நீரில் உள்ளங்கைகள், பாதங்களை 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால் வியர்வை குறையும். வியர்வையை அழுத்தித் துடைக்காமல், மிருதுவான துணியால் ஒத்தி எடுக்கவேண்டும். இது தற்காலிகத் தீர்வுதான்.

சித்த மருத்துவத்தில் தீர்வு தேடுவோர் 100 கிராம் செண்பகப்பூ, ரோஜா மொட்டு, பொன் ஆவாரம்பூ, தவனம் போன்ற பூக்களை உலர்த்தி, அத்துடன் கடலைப் பருப்பு சம அளவு எடுத்து, சிறிதளவு வெட்டிவேர், சந்தனம், வெள்ளரி விதை, முல்தானி மட்டி, கால் கிலோ பயத்தம்பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தினமும் தேய்த்துக் குளிக்க, வியர்வை நாற்றம் நீங்கும்.

ffhgfg
வியர்வையில் பூஞ்சைகள் வளரக்கூடும். அதனால், குளித்து முடித்ததும் வியர்க்குரு பவுடர் போடுவதன் மூலம் இதுபோன்ற பூஞ்சைப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
சருமமே சகலமும்!

உணவில் வெங்காயம் அதிகம் சேர்க்கக் கூடாது. டியோடரன்ட், சென்ட், க்ரீம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

சிவப்பும் கருக்கும்

பொதுவாக, தோலின் மேல்பாகம் 28 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. தோலின் நிறம் ஃபியோமெலனின் (Pheomelanin)மற்றும் யூமெலனின் (Eumelanin)என்ற மெலனின் அணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இயற்கை ஒருவருடைய தோலின் நிறத்தை கூடுதல் ஃபியோமெலனின் கொண்டு எழுதினால், அவருடைய தோல் நிறம் வெள்ளையாகவும், யூமெலனினைக் கூடுதலாகக் கொண்டு எழுதினால் கறுப்பு நிறமாகவும் அமையும்.

வெயிலில் அதிகம் அலைபவர்களுக்கு நிறம் மங்கும். கை, கழுத்து, முகம் பகுதிகளில் கறுத்துவிடும். நல்ல நிறத்துடன் இருப்பவர்கள் வெயிலில் போய்விட்டு வந்தால், கன்னம் மற்றும் முகம் சிவந்துவிடும். உடலில் மூடப்படாத பகுதியைத்தான் சூரியக் கதிர் நேரடியாகத் தாக்கி, எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கழுத்தில் அணியும் நகைகள், மஞ்சள் கயிறு இவற்றால் அலர்ஜி, அரிப்பு ஏற்பட்டு, தோலின் நிறம் மாறிவிடும்.

பாதிக்கப்பட்ட இடத்தில் பப்பாளியை அரைத்துப் பூசுவதன் மூலம் பலன் கிடைக்கும்.

தோல் பாதிக்கப்படாமல் இருக்க சன்ஸ்கிரீன் போடலாம். முடிந்தவரை, பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம்.
hjkjk
முகப்பரு

முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும்.

சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். இதற்கு, ஃபாலிகுலர் ஹைப்பர்கெரட்டோஸிஸ் (follicular hyperkeratosis) என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது.

பரு வராமல் தடுக்க:

அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், கேலமைன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

தினமும் ஐந்து முறை முகத்தை உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பினால் கழுவ வேண்டும்.

ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு இரண்டையும் சம அளவு எடுத்து, பால் விட்டு நைஸாக அரைத்து, பருக்களின் மீது பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் கூடும்.

எலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும்.

ஆறு மாதங்கள் தொடர்ந்து டாக்டரின் அறிவுரையின்பேரில் மாத்திரை, மருந்துகள் மற்றும் களிம்பு பயன்படுத்துவதன் மூலம், முகப்பரு மறுபடியும் வராமல் தடுக்கலாம்.

பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மை உள்ள மரு, டாட்டூ மற்றும் பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சைமுறைகள் உள்ளன.

அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக்கொண்டு மட்டுமே குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்குத் தகுந்த சிகிச்சைமுறையைத் தேர்வு செய்வதன்மூலம், வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும்.
ffhgfg
தோல் சுருக்கம்

தோலின் உட்பகுதியில் உள்ள எலாஸ்டிக் தசைகள் தோலுக்கு அழகான அமைப்பைக் கொடுக்கும். இதில் ஏதாவது ஒரு தசை சரிவர வேலை செய்யாதபோது ஏற்படுவதுதான் சுருக்கம்.

தோலின் தன்மைக்கு ஏற்றாற்போலப் பனிக் காலங்களில் தோலில் சுருக்கங்கள் தோன்றும். பழங்கள், நீர், நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

எலுமிச்சைச் சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால், தோல் சுருக்கம் மறையும்.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வினிகரில் டார்ட்டாரிக் (tartaric)அமிலமும், சிட்ரிக் அமிலம் சிறிதளவு இருக்கின்றன. இவை சருமத்தை மென்மையாக்கும். வெங்காயச் சாறுடன் சில துளிகள் வினிகரைக் கலந்து முகச் சுருக்கம் உள்ள இடங்களில் பூசி வரவும்.
ffhg

வெடிப்பு

தோலில் நீர்சத்துக் குறையும்போது, கை, கால்களில் அரிப்பு, வெடிப்பு, சிவந்த தடிப்புகள், மற்றும் வீக்கம் ஏற்படலாம். நீர்சத்தினால் வரும் சாதாரண வெடிப்பு கால் பாதத்தின் ஓரங்களில் வரும். சிலருக்கு சிவந்து தீக்காயங்கள் போலவும் தோற்றம் அளிக்கலாம். கொப்புளங்கள் ஏற்பட்டு அதில் இருந்து நீர் கசியக்கூடும். இதுவே உலர்ந்து தோலின் மீது படையாகப் படியவும் நேரிடும்.
சருமமே சகலமும்!

தோலினால் ஆன காலணிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வெடிப்பைத் தவிர்க்கலாம்.

ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் மாய்ஸ்ச்சரைசர் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

தேவையற்ற முடி…

தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி, மாதவிடாய்க் கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாகச் சுரத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு முகம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் முடி வளர நேரிடுகிறது. இதுவே, மனதளவில் மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.

குப்பைமேனிக் கீரை பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், கஸ்தூரி மஞ்சள்தூள், சுட்ட வசம்பு இந்த நான்கையும் சம அளவு எடுத்து அரைத்து, தண்ணீரில் குழைத்து, படிகக்கல்லில் (pumice stone)தடவி, உடலில் முடி உள்ள பகுதியில் லேசாகத் தேயுங்கள். தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடும். மீண்டும் வளராது.

அடிக்கடி பியூட்டி பார்லர் போய் த்ரெடிங், வாக்சிங் செய்பவர்கள்கூட, தினமும் கை, கால்களைக் கழுவும்போது இந்த மிக்ஸைப் பயன்படுத்தலாம்.
jhkj
கண் கருவளையம்

கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும்.

தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும்.

பப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும்.

ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடருடன் சிட்டிகை பார்லி பவுடரைக் கலந்து மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து கண்களுக்குக் கீழ் பூசுங்கள். கண்ணுக்குக் கீழ் தொங்கும் சதை, கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

கண்களைக் குளிர்விக்க ஐஸ் தண்ணீரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையைக் கண்களை மூடி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

பாதாம் பருப்பை ஊறவைத்து, பால் விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால், கருவளையம் மறையும்.

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கண்களின் மீது வைத்து சிறிது நேரம் ரிலாக்ஸாக உறங்குவது கண்களின் கருவளையத்தைப் போக்கும்.
cghch
சருமப் பராமரிப்பு

எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்துவந்தால், சருமம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து மீள முடியும்.

பொதுவாக, முகத்தில் உள்ள சருமத்தைப் பாதுகாக்க கிளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங், சன்ஸ்க்ரீன் ஆகிய நான்கையும் சரிவரச் செய்தால், சருமம் அன்று பூத்த மலராக மென்மையுடன் இருக்கும்.

முகத்தில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்த, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம். சருமத்தின் துவாரங்கள் திறந்து தூசுக்கள், அழுக்குகள் நீங்கும். பிறகு, டர்க்கி டவலால் டோனிங் செய்யுங்கள்.

உள்ளங்கையில் ஐந்து சொட்டு டோனரைவிட்டு, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கவேண்டும்.

சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போனால், வாடிவிடும். மாய்ஸ்ச்சரைசரைப் போட்டு நன்றாகத் தடவிப் படரவிட வேண்டும்.
gvhgh
எண்ணெய் சருமத்தினருக்கு…

கொளுத்தும் வெயில் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து, உங்கள் முக அழகை கெடுத்துவிடும்.

நீங்கள் செய்ய வேண்டியது:

வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

முகத்தைத் தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

வெள்ளரிக்காயைத் தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.

வெள்ளரிச்சாறுடன், பால் பவுடர் கலந்து தொடர்ந்து ஒரு மாதம் தடவினால், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாகக் காணப்படும்.

தக்காளிப் பழத்தை பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி, காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதி, கேரட் துருவலைக் கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

சோளத்தை நன்கு பொடி செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.

hjkj
பப்பாளிக்கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாகப் பசை போல் குழைத்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய்த் தன்மை குறையும்.

ஆயில்ஃப்ரீ அல்லது சோப்ஃப்ரீ ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவலாம்.

நீர் மோரை ஒரு பஞ்சில் தோய்த்து, நன்றாகத் துடையுங்கள். அழுக்கு அனைத்தும் வெளியேறிவிடும்.

பேரீச்சையில் தேன் விட்டு ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி ஃபேஷியல் செய்தால், மாசு மரு இல்லாமல் முகம் பளிச்சென்று இருக்கும்.

வறண்ட சருமத்தினருக்கு…

தோலில் ஈரப்பசை, எண்ணெய்ப் பசை மிகவும் குறைவாக இருப்பதால், வறண்ட சருமம் ஏற்படுகிறது.

இதனால் வெள்ளைத் திட்டுக்கள், அரிப்பு, கரும்புள்ளிகள், வெடிப்புகள், தேமல் போன்றவை ஏற்படலாம். வறண்ட சருமத்தினர் கோடையை எண்ணி கலங்கவேண்டியது இல்லை. ஆனால், இத்தகையவர்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையால் ஏற்படும் பிரச்னையில் இருந்து சமாளிக்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.

குளிக்கும் நீரில் சில சொட்டு தேங்காய் எண்ணெய்விட்டுக் குளிக்கலாம். இது சருமத்தில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்க உதவும்.

தினமும் குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.

குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதன்மூலம் சருமம் மினுமினுக்கும். குளிருக்கு இதமாகவும் இருக்கும்.

ஒரு பாத்டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டம்ளர் வினிகர் சேர்த்து 15 நிமிடம் உடம்பை ஊறவைத்துக் குளிக்கவும். இதனால் அரிப்பு குணமாகும். சருமம் மென்மையாகும்.

வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசினால், சருமம் பளிச்சென இருக்கும்.

4 பாதாம் பருப்பு அரைத்த விழுதுடன், தேன், பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து சருமத்தில் பூசி ஐந்து நிமிடம் கழித்துக் கழுவலாம்.

வாழைப்பழக் கூழுடன், பட்டர் ஃப்ரூட் இரண்டைக் கலந்து சருமத்தில் பூசி ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்.

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது இந்த எண்ணெயை உடலில் தடவிக் கொள்ளுங்கள்.

சந்தன பவுடர், பச்சைப் பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, முல்தானி மட்டி பவுடர், ரோஜா இதழ் தூள் இவற்றைக் கலந்துவைத்து, சருமத்தில் தேய்த்துக் குளித்துவர, வறட்சி நீங்கி, தோல் பளபளக்கும்.

கொழுப்பு உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

நார்மல் சருமம்

எந்தவிதமான பிரச்னையும் இல்லாத சூப்பரான சருமம் இது. தரமான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாதிப்பு ஏற்படாமல், அழகைக் கூட்டலாம்.

காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

உலர்ந்த திராட்சையின் தோல் நீக்கி, உதட்டின் மீது தடவி வந்தால், உதடுகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
சருமமே சகலமும்!

குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைப் பராமரிக்க, சோப்பிற்குப் பதிலாகக் கடலை மாவைப் பயன்படுத்தலாம்.

பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. சிறந்த பெட்ரோலியம் ஜெல்லை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லுக்குப் பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதுடன், கூடுதல் மென்மையும் கிடைக்கும்.

குளிர்காலத்தில் மாய்ஸ்ச்சரைசர்கள் மற்றும் க்ரீம்கள் தடவி, சரும பொலிவைத் தக்கவைக்கலாம்.

அலர்ஜி சருமம்

உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை எதுவும் இந்த வகை சருமத்தினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இத்தகைய சரும அலர்ஜி இருப்பவர்கள், எதெல்லாம் தனக்கு அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சரும அலர்ஜிக்குத் தண்ணீர்தான் சிறந்த மருந்து. நிறையத் தண்ணீர் அருந்துங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ஒவ்வாமையைப் போக்கும்.

குளிர்ந்த நீரில் குளித்தால்தான், அலர்ஜி உள்ள இடத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.

தனியாகத் துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜி வராமலும் பரவாமலும் தடுக்கலாம்.

ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், பன்னீர் கலந்து பூசிக்கொள்வதன் மூலம் அலர்ஜி நெருங்காது.

ஒவ்வாமை ஏற்படும் இடத்தில், எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயைத் தடவலாம்.

வேப்பிலையைத் தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, உடலில் தடவி, பிறகு குளிக்கலாம்.

உணவு

சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையைப் பொறுத்து மட்டும் அல்ல… நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான தண்ணீரை வழங்குகின்றன.

வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாகத் தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

நைசின் சத்துக் குறைபாட்டினாலும் முகப் பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால், தோலில் பல பிரச்னைகள் உண்டாகிறது.

சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம்.

இவற்றைத் தவிர்க்க, முழுத் தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பாலுடன் சத்துமாவு சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சைச் சாறு, முட்டைக்கோஸ், கிருணி, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள், அரைக்கீரை ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றைச் சாறு எடுத்து தோலிலும் தடவலாம்.

இரும்புச் சத்து, புரதம், வைட்டமின், கால்சியம் கலந்த உணவு வகைகளைத் தினமும் உட்கொள்ளவேண்டும்.

நவீன சிகிச்சை

பருக்கள், சுருக்கங்கள், மரு, மங்கு, கரும்புள்ளி போன்ற அனைத்து சருமப் பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பாதுகாப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வது அவசியம். பிரச்னை முற்றிய நிலையில், அழகு நிலையங்களை அணுகுவதோ, கை வைத்தியத்தின் மூலம் சரிசெய்ய முயற்சிப்பதோ, பலனைத் தராது. தற்போது, தோல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நவீன முறையில் சிகிச்சைகள் உள்ளன. இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் இருக்காது.

பருவால் விழுந்த தழும்புகளை நீக்க… கெமிக்கல் பீலிங் என்ற சிகிச்சை மூலம் ஆசிட் விட்டு மேல் தோலை நீக்கி, புதுத் தோலை வரவழைக்கும் சிகிச்சைக்கு நல்ல பலன் இருக்கிறது.

மற்றொரு சிகிச்சை, வைரத்தைக்கொண்டு பழைய தோலைச் சுரண்டி எடுப்பது. இதற்கு மைக்ரோடெர்மாப்ரேஷன் என்று பெயர். தோலில் உள்ள இறந்த செல்கள் இதன் மூலமாக நீக்கப்படுகின்றன.

தேவையற்ற முடிகளை நீக்குதல், மச்சம், முகப்பரு தழும்புகள் மற்றும் சுருக்கம், தொங்கும் தசைகளைச் சரிசெய்ய என்.டி. யாக் (ND YAG) டையோட் மற்றும் டையோட் ரேடியோ ஃப்ரீக்வன்ஸி லேசர் சிகிச்சை செய்யலாம்.

க்யூ ஸ்விட்ச்டு என்.டி. யாக் என்ற சிகிச்சை மூலம் கரும்படை, கரும்புள்ளி, தேமல், மரு, மங்கு, பச்சைக் குத்துதல் போன்றவற்றை மறையச் செய்ய முடியும். தோலும் மென்மையாக்கப்படும்.

தோல் தொங்கி, வற்றிய கன்னத்தை, கட்டடத்தில் சிமென்ட் பூசுவதுபோல், கொழுப்பைச் செலுத்தி ஃபில்லர் சிகிச்சை செய்யலாம்.
சருமமே சகலமும்!

வைட்டமின் க்ரீம்கள் மற்றும் பல்வேறு தெரப்பி சிகிச்சைமுறைகளும் உள்ளன.

முகப்பரு, தழும்பு, கால் ஆணி, மச்சம், மரு போன்ற தோலின் தேவையற்ற வளர்ச்சிகளை நீக்கவும் லேசர் சிகிச்சைகள் உதவுகின்றன.

கோடையில் உங்கள் சருமத்தைப் பாதுகாக்க உடலில் நீர்ப் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், சரிவிகித ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள், தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்கள். இதைச் செய்தால், கோடை வெயிலிலும் உங்கள் சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.

Related posts

முகம் முழுவதும் ஒரே பருக்கலா இருக்கா..? இதனால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா..?

sangika

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

nathan

வெண்ணெய்யை பயன்படுத்தி பாருங்க…!! சருமம் பொலிவுடன் இருக்க

nathan

க அழகைக் கெடுக்கும் முகப்பருக்களைப் போக்க

nathan

தழும்பை மறைய வைக்க

nathan

விதைப்பையில் வலி, வீக்கம், கட்டிகள் போன்ற நோய்களையும் கொரோனா ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது,

nathan

அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம்….தெரிஞ்சிக்கங்க…

nathan

அம்மாடியோவ் என்ன இது? ஆடை அணியாமல் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை –

nathan

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் ?

nathan