nhkjilj
தலைமுடி சிகிச்சை

இதை செய்யுங்கோ..!! தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியமா.?

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தினமும் எண்ணெய் தேய்ப்பது மிகவும் நல்லது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

எண்ணெய் தேய்ப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றும், எண்ணெய் தேய்ப்பது கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனால் கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமே என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.

முடி உலர்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு கொடுத்து முடியை பலப்படுத்துகிறது எண்ணெய்.

அன்றைய பெண்கள் கடுகு, பீலு எண்ணெய் தேய்த்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுவாக எல்லோரும் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகும். இரண்டு எண்ணெய்களுமே தலைக்கு தேய்ப்பதற்கு சிறந்தவை என்பது நாம் பெருமைகொள்ளத்தக்க ஒன்று.

நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கிறது.
முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.
nhkjilj
குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை வாரம் ஒரு முறையும், குளித்த பிறகு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை அன்றாடமும் கடைபிடிக்கலாம்.

தலை முழுக்க எண்ணெய் படும்படி மட்டும் தேய்த்தால் போதும்; நனையும் அளவுக்கு அதிகம் தேய்க்க தேவையில்லை.

எண்ணெய் ஒவ்வாமை உள்ளவர்களும் தலையில் இயற்கையாக அதிக எண்ணெய் உள்ளவர்களும், எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்கலாம்.

இயற்கையாக கிடைக்கக்கூடிய நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினாலே போதும்.

செயற்கை ஹேர் ஆயில்களை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். விளம்பரத்தை பார்த்து வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

உங்கள் கூந்தல் எந்த வகை என்பதை அறிய

nathan

கூந்தல் மிருதுவாக்கும் ரோஜா இதழ்

nathan

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan

கூந்தலை வளரச் செய்யும் மூன்று இயற்கையான கண்டிஷனர்

nathan

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

உங்க தலைமுடி பலவீனமா இருக்கா? அப்ப இத முயன்று பாருங்கள்…

nathan

உங்க தலையில இந்த மாதிரி இருக்கா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு இதெல்லாம் செஞ்சா வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தெரியுமா!

nathan