29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இளம் வயதில் முகத்தில் சுருக்கம்: இதோ சில குறிப்புகள் உங்களுக்கு!

ld36இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம்  ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு :
* காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தோளில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.
* வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.
* துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
* நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
* கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே. முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?

Related posts

முக அழகை பாதிக்கும் வியாதிகள் பற்றி தெரியுமா? கட்டாயம் இத படிங்க!…

sangika

பளபளப்பான முகத்தை பெற அருமையான வழி உள்ளது.

nathan

தினமும் சிவப்பு சந்தனத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

பேரழகியா மாறணுமா?…அப்ப இத மட்டும் வீட்லயே முயன்று பாருங்கள்…

nathan

அந்தரப் பகுதியில் உள்ள கருமை நீங்கி நிறம் மாற பெரிதும் உதவும் சூப்பர் டிப்ஸ்!

nathan

மேடிட்ட தழும்பை மறையச் செய்யும் சில எளிய வீட்டு சிகிச்சை முறைகள்!!

nathan

சொந்த ஊர் திரும்பிய முதியவருக்கு நடந்த கொடுமை..! என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’!..

nathan

பெண்கள் இதை அக்குளில் தடவினால், கருமையும் வராது ஷேவ் பண்ண அவசியம் இருக்காது

nathan

உங்களுக்கு தெரியுமா ஒரு நாளைக்கு 2 முறை இதை பூசினால் காணாமல் போகும் கருவளையம்..!

nathan