ஒருசிலருக்கு முகப்பருக்கள் நீங்கினாலும் அது தோன்றிய இடம் தழும்பாக மாறி விடும். அதை போக்க எலுமிச்சைபழம் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
முக அழகை கெடுக்கும் முகப்பரு பிரச்சினைக்கு எளிய வீட்டு வைத்தியம் மூலமே நிரந்தர தீர்வு காணலாம். அதற்கு எலுமிச்சைபழம் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் சுடுநீர் சேர்த்து சிறிது நேரம்வைக்க வேண்டும்.
இரவு தூங்கும் முன்பாக காட்டன் துணியில் முக்கி முகம் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். அது முகத்தில் படியும் பாக்டீரியா கிருமிகளை அழித்து சருமத்தை பொலிவாக்கும்.
தொடர்ந்து சில வாரங்கள் செய்துவந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
அடுத்து, கொத்தமல்லி இலைகளை சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு லவங்கப்பட்டை தூள் கலந்து தினமும் இருவேளை முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவுபெறும். முகப்பரு தொந்தரவும் குறையும்.
மேலும் ஒரு கைப்பிடி துளசியுடன் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து நன்றாக குழைத்து, முகத்தில் பூசுங்கள். உலர்ந்த பின்பு கழுவுங்கள். துளசி சரும பொலிவை மேம்படுத்தும். மஞ்சள் சருமத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவும். முகப்பரு பிரச்சினையும் தீரும்.
முகப்பருக்கள் நீங்கினாலும் ஒருசிலருக்கு அவை தோன்றிய இடம் தழும்பாக மாறி விடும். அதனை போக்க ஜாதிக்காயை பயன்படுத்தலாம். தேங்காய் பாலில் ஜாதிக்காயை அரைத்து இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக முகத்தில் தடவ வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்பும், கரும்புள்ளியும் மறைந்துவிடும்.