இன்றைய காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
இதற்காக பலரும் பல முயற்சிகளை செய்திருப்பார்கள், ஆனால் முள்ளங்கி நிச்சயம் கைகொடுக்கும் என்றே கூறலாம்.
முள்ளங்கியை பயன்படுத்துவது எப்படி?
முள்ளங்கியிலுள்ள விட்டமின்கள் சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது.
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி மைக்ரோ பியல் பொருட்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் போன்றவைகள் உள்ளன. மேலும் இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்குகிறது.
கருப்பு முள்ளங்கியின் சாற்றை பிழிந்து தலையில், மயிர்கால்களில், முடியில் தடவி வந்தால் கூந்தலும் வலிமை அடைந்து முடி வளர்ச்சி தூண்டப்படும்.
பொலிவான மற்றும் பளபளப்பான கூந்தல்
முள்ளங்கி சாற்றை தலையில் அப்ளே செய்து ஒரு மணி நேரம் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசி விடுங்கள். இதிலுள்ள இரும்புச் சத்து கூந்தலுக்கு நல்ல வலிமையையும் பொலிவையும் பளபளப்பையும் கொடுக்கிறது.
பொடுகு
முள்ளங்கி சாற்றை தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கூந்தலை அலசி விடுங்கள். இப்படி செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கூந்தல் ஈரப்பதம்
இதிலுள்ள நீர்ச்சத்து கூந்தலுக்கும் தலை சருமத்திற்கும் போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது. இது கூந்தலின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் களைந்து ஆரோக்கியமான கூந்தலை பரிசளிக்கிறது.
எனவே இந்த மாதிரியான ஏராளமான நன்மைகளை தரும் முள்ளங்கியை உங்கள் உணவிலும் பியூட்டி முறைகளிலும் சேர்த்து பலனடையுங்கள்.