இன்றைய நாட்களில் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமில்லாது பெற்றோர் நிச்சயித்து நடைபெறும் திருமணங்களும் கூடவே போட்டி போட்டுக் கொண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசல் ஏறுகின்றன.இதற்கு காரணம்? தாலிகட்டும் முன்பு இருந்த அந்த காதல், திருமணம் செய்த புதிதில் இருந்த அந்த ஒட்டுதல், கொஞ்சம் நாட்களிலேயே புரியாது பிரிந்துவிடுவது எதனால்? இந்த கேள்விகளிலேயே விடையும் இருக்கிறது. திருமணமான புதிதில் உங்களுக்குள் இருந்த புரிதலும், பிரியமும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும், சிறிது நாட்களில் வெயிலில் வைத்தப் பனிக்கட்டியை போல உருகிவிடுகிறது.உங்கள் துணையோடு கொஞ்ச நேரம் எழில்மிகு மாலை நேரத்தில் கைக்கோர்த்து சிறிது தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளுங்கள். குறைந்தது பக்கத்தில் இருக்கும் பூங்கா அல்லது கோவில்களுக்கு கூட போய் வரலாம். அந்த நடைப்பயணம் உங்கள் உறவை இணைக்கும் பாலமாய் இருக்கும். அன்பின் வெளிப்பாட்டை அதிகப்படுத்தும்.பெண்களுக்கு மிகவும் விரும்புவது அவர்களது துணையோடு கைக்கோர்த்து நடப்பது. நீ எப்படி இருக்கிறாய், இன்றைய நாள் எப்படி இருந்தது… இந்த கேள்விகளை கேட்க ஒருநாளும் மறக்க வேண்டாம். நீங்கள் அவர்களின் மேல் அக்கறையாக இருக்கிறீர்கள் என அவர்கள் உணர்ந்தாலே போதும். உறவு வலிமையடைந்துவிடும்.
ஆண்களுக்கு கோபம் வந்துவிட்டால் அவர்கள் என்ன பேசுகின்றனர் என்றே தெரியாது. மனதில் பட்டதை மட்டுமின்றி தவறான வார்த்தைகளையும் உபயோகப்படுத்துவார்கள். இந்த தவறை நீங்கள் தவிர்த்தாலே சண்டை எளிதாக முடிந்துவிடும். தேவையற்ற மன வேதனைகள் ஏற்படாது. உங்கள் துணை எதாவது சின்ன சின்ன விஷயம் செய்தாலும் அவர்களை பாராட்டுங்கள்.
இந்த காரியம் தான் ஒரு உறவு வளமடைய முக்கியமாக தேவை. இந்த உலகிலேயே நம்மை தவிர வேறு யாரும் அவர்களை அதிகமாக புரிந்து வைத்திருக்க முடியாது. பெண்கள் இதை அதிகமாக எதிர்பார்ப்பார்கள். வெறுமெனப் போட்டதை சாப்பிடாது, அது நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். கணவன் – மனைவிக்கு இடையே சண்டை வருவது சகஜம்.
சமயம் விட்டுக்கொடுத்து போவது அவசியம். ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்யாது யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து பேசுவது அவசியம். வேலை, வேலை என்று ஓடி, இருவருக்கும் இடையே மனம்விட்டு பேச கூட நேரம் ஒதுக்காது ஓடிக்கொண்டே இருக்கும் வேகத்தில் உறவு அறுந்துவிடுகிறது.
படுக்கையில் சுகம் மட்டுமே வேண்டும் என்ற எண்ணம் மாறி, அகம் நெகிழ்தலும் ஏற்பட வேண்டும். இரு மனம் இணைவது தான் திருமணம். அதில் ஏற்படும் பிரிவு தான் உறவையும் பிரித்து விடுகிறது. நீங்கள் தினசரி சில விஷயங்களை செய்து வந்தாலே உங்கள் உறவு வலிமையாகிவிடும்.
தினமும் அவர்களை பற்றி நலம் விசாரிப்பது, என்ன செய்கிறாய் என கேட்பது என உங்கள் துணையைப் பற்றி நீங்கள் தெரிந்தாலும், தெரியாமல் இருந்தாலும் கேட்டு விசாரிப்பது அவசியம். இந்த கலந்துரையாடலே உங்களது உறவை வளப்படுத்திவிடும். இதுப்போல சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் பின் தொடர்ந்தாலே உங்கள் இல்லறம் நல்லறமாகிவிடும்…