இதனை எளிதில் சரி செய்ய ஏராளமான வீட்டு வைத்தியங்களே உள்ளன. முகத்தில் எண்ணெய் வடிந்தால் நமது முழு அழகையும் கெடுத்து விடும். இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வை தர கூடிய நச்சுனு 7 டிப்ஸ் இதோ உங்களுக்காக…
எண்ணெய் வடிதலா..?
எண்ணெய் வடிதலா..?
முகத்தில் எண்ணெய் வடிய பல காரணிகள் உள்ளன. குறிப்பாக அதிக படியான எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், முகத்தின் எண்ணெய் சுரப்பிகள் சுரந்து, எண்ணெய்யை கக்கி கொண்டே இருத்தல் போன்றவை காரணமாக அமைகிறது. முகத்தில் எண்ணெய் வடிந்தால் பிறகு பருக்களும் வர தொடங்கும்.
பப்பாளி போதுமே..!
பப்பாளி போதுமே..!
முகத்தின் அழகை பாதுகாப்பதில் இந்த பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களின் முகத்தில் எண்ணெய் வடியாமல் இந்த டிப்ஸ் பார்த்து கொள்ளும்.
தேவையானவை :-
தேன் 2 ஸ்பூன்
வாழைப்பழம் பாதி
பழுத்த பப்பாளி 1 துண்டு
செய்முறை :-
செய்முறை :-
முதலில் பப்பாளி மற்றும் வாழைப்பழத்தை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேன் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் சென்று வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 1 முறை இந்த டிப்ஸை செய்து வந்தால் முகத்தில் எண்ணெய் வடிதல் குறைந்து விடும். அத்துடன் பளபளப்பான சருமமும் கிடைக்கும்.
அருமையான குறிப்பு
அருமையான குறிப்பு
உங்களின் முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்குவதற்கு ஒரு அருமையான குறிப்பு உள்ளது. அதற்கு தேவையானவை..
முட்டை மஞ்சள் கரு 2
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை :-
செய்முறை :-
முதலில் முட்டையின் மஞ்சள் கருவை தனியாக எடுத்து நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மீண்டும் அடித்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம். முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் இருக்கும் வைட்டமின் ஈ, எ ஆகியவை பொலிவான எண்ணெய் வடியாத சருமத்தை தரும்.
அவகடோ
அவகடோ
முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்க இந்த அவகேடோ பழம் உதவுகிறது. பாதி அவகடோ பழத்தை அரைத்து கொண்டு 2 ஸ்பூன் தேனுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் மென்மையாகவும், இளமையாகவும் மாறும். முகத்தில் ஏற்பட்டுள்ள சுருக்கங்களையும் இது போக்க கூடிய ஆற்றல் பெற்றது.
எலுமிச்சையும் தேனும்…
எலுமிச்சையும் தேனும்…
முகத்தை பராமரிப்பதில் இந்த எலுமிச்சை நன்கு உதவுகிறது. 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்ட்ராவ்பெர்ரி குறிப்பு
ஸ்ட்ராவ்பெர்ரி குறிப்பு
இந்த செக்க சிவந்த ஸ்ட்ராவ்பெர்ரி குறிப்பு உங்களின் முக அழகை இரட்டிப்பாக வைக்கும். இதற்கு தேவையானவை…
ஸ்ட்ராவ்பெர்ரி 2
தேன் 1 ஸ்பூன்
யோகவர்ட் 1 ஸ்பூன்
செய்முறை :-
செய்முறை :-
முதலில் ஸ்ட்ராவ்பெர்ரி நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன், யோகர்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் எண்ணெய் பசை நீங்கி ஈரப்பதமான சருமத்தை பெறலாம்