26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
whathi
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

வெள்ளை முடிப்பிரச்சனைக்குக்(white hair) இயற்கை வழிமுறையகள்…

அதிர்ஷ்டவசமாக, வெள்ளை முடிப்பிரச்சனையைச்(white hair) சமாளிக்க பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றின் வளர்ச்சியை தடுப்பது மற்றும் அதன் செயல்முறைகளை ரத்து செய்வது போன்றவை அதில் அடங்கும் .

சத்தாண உணவு
உங்கள் உணவில் நிறைய முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதம் மற்றும் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். “பயோட்டின்” உங்கள் முடியின் இயற்கை நிறத்தைப் பராமரிக்கிறது. இது வைட்டமின் “H” என்றும் அழைக்கப்படுகிறது, இது பாதாம், ஓட்ஸ் மற்றும் வெள்ளரி ஆகியவற்றில் அதிகம் உள்ளது.

வைட்டமின்கள்
வைட்டமின் ஏ, பி 12, சி மற்றும் ஈ செறிவூட்டப்பட்ட உணவுகள் உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். துத்தநாகம், ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் தாமிரம் ஆகியவை முடிக்கு அவசியமான கனிமப்பொருள்கள். உங்கள் உணவு உட்கொள்ளல் இந்த கனிம உறுப்புகளை வழங்கவில்லை என்றால், நீங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்ளலாம்.

hairmassageiuhiu அழகு பொருட்கள்
மோசமான தரம் கொண்ட முடி(white hair) அழகுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய முடி பொருட்கள், அம்மோனியா, குளோரின், பாஸ்பேட் மற்றும் சல்பேட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவைகள் முடி உலர்வு மற்றும் முடி வேர்களை பலவீனமாக்கும் வேலையைச் செய்து இறுதியில் வெண்மையான முடியை உங்களுக்குத் தருகின்றன. எனவே அதிகபட்ச இயற்கை பொருட்கள் கொண்டிருக்கும் முடி அழகுப்பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்.

புகை பழக்கம்
புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகை பிடிப்பவர்கள் முடியானது, சராசரியாக நான்கு மடங்கு அதிக சாம்பல் நிறமுடையதாக இருக்கும். மேலும் புகைபிடிப்பது உங்கள் முடியை மந்தம் மற்றும் உடையக்கூடியதாக மாற்றுகிறது , அதனால் முடியானது அடிக்கடி உடைந்து கொட்டி அடர்த்தியிழக்கிறது.

தலை மசாஜ்
தலை மசாஜ்களை அடிக்கடி செய்ய வேண்டும். ஒரு நல்ல தலை மசாஜ், உங்கள் தலைக்கு ஆரோக்கியமான சரியான இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது மற்றும் ஒளிரும் முடியை உறுதி செய்கிறது. குறிப்பாக உங்களுக்கு ஆரோக்கியமான கருமை நிற முடிகளைத் தர தேங்காய் அல்லது பாதாம் போன்ற இயற்கை எண்ணெய்களைத் தலைக்கு பயன்படுத்துங்கள். உங்களுக்கு ஏற்கனவே உள்ள வெள்ளை முடியை மறைப்பதற்கு, பல ஹேர் டைகள் உள்ளன. மற்றொரு வழி Melancon மாத்திரைகள் ஆகும். இந்த மாத்திரைகள் உங்கள் முடியின் இயற்கையான நிறத்திற்கு புத்துயிர் அளிப்பதோடு மயிர்க்கால்களில் மெலனின் உற்பத்தியைத் தூண்டுகின்றன. இவைகளை ஆன்லைனில் கூட ஆர்டர் செய்து பெறலாம். இவை உங்களின் சாம்பல் மற்றும் வெள்ளை முடிப்பிரச்சனையை(white hair) கண்டிப்பாகத் தீர்க்க உதவும்.

Choose your hair colour wiselyஹேர் கலரிங்
உங்கள் முடியில் 40 சதவிகிதத்திற்கும் மேலாக வெள்ளை நிறமாக இல்லாவிட்டால், நீங்கள் ஒரு முழு வண்ண மாற்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. 40 சதவிகிதத்திற்கும் குறைவான சாம்பல் நிற முடிகளை மாற்றியமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் தலைமுடியில் சில முடிகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் பல வழிகளை முயற்சி செய்யலாம்.

ஹென்னா
இயற்கை முறைகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் எடுத்துக்கொள்வதைப் பற்றி யோசிக்கலாம். அவற்றில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுவது “ஹென்னா”- வாகும். இது இயற்கையாக ஒரு ஆழ்ந்த சிவப்பு நிறத்தை வழங்குகிறது மற்றும் உங்கள் முடியை ஈரப்பதமாக மற்றும் பளபளப்பாக வைக்கிறது. உடனடியாக ஹென்னாவைப் பயன்படுத்துவது ஒரு சிறிய குழப்பம் விளைவிக்கும். நீங்கள் ஏற்கனவே இரசாயன முடிச் சாயங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அனைத்து நிறங்களும் நீங்கிய பிறகு “ஹென்னா” வை உபயோகியுங்கள். இப்பொழுது அது திறம்பட செயல்படத் தொடங்கும்.

oils for hair 2தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயம்
சாம்பல் முடி கொண்ட மக்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் மற்றோரு தீர்வு தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயம். தேங்காய் எண்ணெயில் வெந்தயப் பொடியைச் சேர்த்து உங்கள் முடியில் பூசி அரை மணி நேரம் கடந்த பின் அதைத் தண்ணீரில் கழுவுங்கள். இது கெராடின் மற்றும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் அனைத்து வயதினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

ரோஸ்மேரி
முடியின் இயற்கை நிறத்தைப் பெற, பிரபலமான இயற்கை முடி rinseகளை முயற்சி செய்யுங்கள். நீங்கள் ரோஸ்மேரி மற்றும் sage -ஐப் பெற முடிந்தால், இரண்டிலும் அரை கப் எடுத்து 30 நிமிடங்கள் கொதிக்கவையுங்கள். மூலிகைகளை வடிகட்டுங்கள், நீர் குளிர்ந்த பின், அதை உங்கள் முடி மீது ஊற்றி இயற்கையாக உலர விடுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். மேலே உள்ள கரைசலில், ரோஸ்மேரி மற்றும் sage-க்குப் பதிலாக இந்திய நெல்லிக்காய் மற்றும் தேங்காய் அல்லது கருப்பு அக்ரூட் பருப்பைப் பயன்படுத்தலாம். அவை உங்கள் முடிக்கு இயற்கை நிறத்தை வழங்குகின்றன. நீங்கள் தினமும் சுலபமாக செய்ய வேண்டிய சில குறிப்புகளும் உள்ளன. உதாரணமாக, வெங்காயத்தைத் தினமும் உங்கள் தலையில் தேய்த்து வருதல் கூட உங்கள் தலைமுடியின் கருப்பு நிறத்தை திருப்ப உதவும்.

whathiதலை குளியலுக்கு முன் தினமும் வெண்ணெய் எண்ணெயால் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். மற்றொரு விலை மலிவான இயற்கைத் தீர்வு உங்கள் முடியை தொடர்ந்து பால் / தயிர் மற்றும் கடலை மாவுக் கலவையை கொண்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது வெள்ளை முடிப்பிரச்சனை படிபடியாக குறைந்து இயற்கையான கருமை நிறத்தை பெறலாம்.

Related posts

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan

ஈரத்தலைமுடியைச் சீப்பால் சீவவே கூடாது. உதிராமல் பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

வீட்டிலேயே உங்கள் கூந்தலை புதுப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!!

nathan

உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா?

nathan

பெண்களுக்கு கூந்தல் உதிர காரணங்கள்

nathan

தலைமுடி இல்லை என்று இனி கவலைப்பட தேவையில்லை!சூப்பர் டிப்ஸ்….

nathan

கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்

nathan

தலைமுடி மென்மையாகவும் வளவளன்னு கருகருன்னு இருக்க நீங்க இந்த விஷயங்கள செஞ்சா போதுமாம்!

nathan

கூந்தல்: இளநரைக்கு அற்புத மருந்து

nathan