அழகு குறிப்புகள்

சில இயற்கை வழிகள்! உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப்போக்க..

சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இதனை மறைப்பதற்கு பல பெண்கள் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கை வழியில் உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப் போக்கினால், எவ்வித பக்கவிளைவுகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.


1. எலுமிச்சை துண்டால் சர்க்கரையைத் தொட்டு, உதட்டின் மேற்பகுதியில் சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். 3-5 நிமிடம் செய்வது மிகவும் சிறந்தது. இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கருமையாக இருக்கும் உதட்டின் மேல் பகுதியை வெள்ளையாக்கலாம்.

2 . ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கலந்து, உதட்டின் மேல் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை செய்து வந்தால், கருமை நீங்கிவிடும்.

3. ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை இரவில் தூங்கும் முன் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், உதட்டிற்கு மேலே கருமையாக இருப்பதைப் போக்கிவிடலாம்.

4. ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை மேல் உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும். இதற்கு கேரட் ஜூஸில் உள்ள விட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்து, வெள்ளையாவதற்கு உதவும்.

5. இது மிகவும் எளிமையான வழி. இதற்கு நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ் போதுமானது. தினமும் டூத் பிரஷ் கொண்டு கருமையாக இருக்கும் உதட்டிற்கு மேலே 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தினமும் இப்படி செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்.. முக அழகிற்கு…

nathan

தமிழ்நாட்டு பெண்கள் கருப்பா இருந்தாலும் கலைய இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika

உங்களுக்கு தெரியுமா வால்நட்ஸ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள்!

nathan

அழகு சாதனப் பொருள் வாங்கும் போது கவனமா இருங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ்..சரும வறட்சிக்கு இயற்கை முறையில் பாதுகாப்பு!

nathan

கணவரை பிரிந்துவிட்டாரா தொகுப்பாளினி பிரியங்கா

nathan

சர்வதேச பெண்கள் தினம் ஏன் மார்ச் 8?

nathan

கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா?

nathan