34 C
Chennai
Wednesday, Aug 20, 2025
7eda093665bc04a6e
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்க உதவும் சில டிப்ஸ்…!சூப்பர் டிப்ஸ்

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும். விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்கும் வழி இது. கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளும் வழக்கம் இருப்பவர் கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும். தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக் கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும்.

சீயக்காயும் குறைந்த அளவே போதும். தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு, புங்கங்காய் கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும். 7eda093665bc04a6e

Related posts

கூந்தல் உதிர்வில் சீப்பின் பங்கு

nathan

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan

தலைமுடி பராமரிக்கும் முறை

nathan

கோடையில் கூந்தல் காப்போம்!

nathan

உங்களுக்கு தெரியுமா பீர் குடிக்கு மட்டுமல்ல, முடிக்கும் தான்!!!

nathan

காபி குளியல் போடுங்க…. கரு கருவென முடி வளரணுமா?

nathan

உணவின் மூலமே கூந்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

nathan

நீங்க இப்படியா தலைக்கு எண்ணெய் தேய்குறீங்க? சீரற்ற பராமரிப்பு முறை…

nathan