hair3jpg
தலைமுடி சிகிச்சை

கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள!….

டெர்மடாலஜிஸ்டுகளின் கூற்றுப்படி, ஒரு நாளில் 50-100 முடிகள் கொட்டுவது இயற்கை தான். ஆனால் அதுவே அதிகரிக்க தொடங்கினால் முடியின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். மரபியலும் முடியின் தன்மை மற்றும் நிறத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனினும், முடியின் பளபளப்பையும் அடர்த்தியையும் அதிகரிக்க நீங்கள் சில உபாயங்களை பின்பற்றலாம். அவை-

hair3jpg

கெமிக்கல்களை தள்ளி வையுங்கள்

தலைமுடிக்கு செய்யப்படும் கெமிக்கல் ட்ரீட்மெண்டுகள் கூந்தலை பலமிழக்க செய்து எளிதில் உடைய செய்து விடும். அது தலைமுடியையும் மெலிதாக்கி விடும்.

ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங், பெர்மிங் ஆகிய ட்ரீட்மெண்டுகள் கூந்தலை பலமிழக்க செய்யும். அது போன்ற செயல்முறைகளை ஒரு 4 வாரங்களுக்கு ஒதுக்கி வைத்தாலே முடியின் அடர்த்தியில் நல்ல மாற்றம் தென்பட ஆரம்பிக்கும்.

எண்ணெய் மசாஜ்

ஸ்கேல்ப்பில் எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்வதால் இரத்தவோட்டம் சீராகி புதிதாக முடி முளைக்க தொடங்கும். எண்ணெயை லேசாக சூடாக்கி வட்ட இயக்கத்தில் ஸ்கேல்ப்பில் மசாஜ் செய்யலாம்.

இந்துலேகா போன்ற எண்ணெய்களில் இயற்கை உட்பொருட்கள் கலந்திருப்பதால் அவை கூந்தலின் வேரை தூண்டி முடியின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும்.

இந்துலேகா எண்ணெயில் வேம்பு, பிரிங்கா மற்றும் கற்றாழை இருப்பதால் அது முடியுதிர்வை நிறுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

இயற்கை உட்பொருட்கள் நிறைந்த பிராடக்டுகள்

சிலிகான் அதிகம் இல்லாத பொருட்களை பயன்படுத்த தொடங்குங்கள். இயற்கை பொருட்கள் உங்களது வேரில் படிவதை தவிர்க்கும்.

முடியின் வேரில் படிவதால் தலைமுடி துள்ளலின்றி தொய்வாக இருக்கும். அதிக எடையுள்ள பொருட்களை தவிர்ப்பதனால் முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

செக்கப் செய்து கொள்வீர்

திடீரென முடி மெலிவது, உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதை குறிக்கும். தைராய்ட் போன்ற குறைபாடுகளால் முடி கொட்டுதல் மற்றும் மெலிதல் ஏற்படலாம். எனவே அந்த சாத்யகூறுகளை உறுதி செய்ய செக்கப் செய்து கொள்வது நல்லது.

முடியை அடர்த்தியாக காட்டும் ஹேர்கட்டை செய்து பாருங்கள்

ஒரே நீளத்தில் இருப்பது போல தலை முடியை வெட்டுவதனால் முடி மெலிதாக தோன்றும். அடுக்கடுக்காக தலைமுடியை வெட்டிக் கொள்வதன் மூலம் கூந்தல் துள்ளலுடன் காட்சியளிக்கும்.

கூந்தலை சீவும் முறையை மாற்றுங்கள்

ஐயானா தில்லோன் (https://www.instagram.com/aianajsays/), ஸ்டைல் கோச் மற்றும் பிளாகரான இவர், தனது கூந்தலை தலைகீழாக சரிய விட்டு சீவுவதாக கூறுகிறார்.

இதனால் உடனடியாக தலைமுடி அடர்த்தியாக காட்சியளிக்குமாம். உங்களது கூந்தல் தொய்வாக காணப்படுவதாக நீங்கள் நினைத்தால் நீங்களும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.

ஸ்டைலிங் பிராடக்டுகளை அளவோடு பயன்படுத்துங்கள்

ஸ்டைலிங் பிராடக்ட்டுகளை அதிகம் பயன்படுத்துவதாலும் தலைமுடி தொய்வாக காணப்படும்.

எனவே சில வாரங்களுக்கு அவற்றை குறைவாக பயன்படுத்திப் பாருங்கள். உங்களது கூந்தல் தானாகவே அடர்த்தியாக காணப்படும்.

மன அழுத்தத்தை விரட்டுங்கள்!

முடியுதிர்வுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணியாகும். இதனால் இளவயதிலேயே நரைக்கவும் தொடங்கிவிடும். மனதை ரிலாக்ஸ் செய்ய மசாஜ், யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.

இரவில் உறங்க செல்லும் நல்ல புத்தகங்களை படித்தல், மனதை அமைதிப்படுத்தும் இசையை ரசித்தல் ஆகியவையும் உங்களை லேசாக்கும். ஹெட் மசாஜுடனான ஹேர் ஸ்பா அற்புதமான பலனை தரக்கூடியது.

சிறந்த டயட்டை பின்பற்றுங்கள்

ஆரோக்கியமான டயட் கூந்தலின் ஆரோக்கியத்துக்கு அவசியம். முடி வளர்ச்சியையும் கூந்தலின் பளபளப்பையும் அதிகரிக்க பச்சை காய்கறிகள், முட்டை, பாதாம் மற்றும் மீன் ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்.

மேலும் உடலில் போதுமான நீர்ச்சத்தினை தக்க வைத்துக் கொள்ள தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.

Related posts

இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா முடி உதிர்வை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்கும் …!

nathan

கூந்தல் வெடிப்பை தடுக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

பொடுகை நீக்கும் வேப்பம்பூ

nathan

உங்களுக்கு தெரியுமா சீயக்காய் பொடியை எவ்வாறு வீட்டிலேயே தயாரிப்பது…!

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி…?

nathan

அடிக்கடி தலையை சொறிய தோணுதா? அப்ப இத படிங்க!

nathan

கூந்தல் உதிர்வா…? எளிய தீர்வுகள் இதோ…

nathan

செம்பட்டை முடியை கருகருவென மாற்ற வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

nathan