36.3 C
Chennai
Friday, Jul 11, 2025
gold
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்ய!…

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். கோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோல்டன் ஃபேஷியலை வீட்டில் செய்வது எப்படி?

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம். இந்த கோல்டன் ஃபேஷியல் கிட்டை கடைகளிலும் பெற்று கொள்ளலாம்.

இருப்பினும் வீட்டிலேயே தயாரிப்பது என்பது மிகவும் எளிமையான மற்றும் சிறந்த வழி.

gold

தேவையான பொருட்கள் :

ஆரஞ்ஜ் – கற்றாழை – முல்தானிமட்டி – காட்டன் துணி – தண்ணீர்

முதலில் ஆரஞ்சை எடுத்துக்கொண்டு அதனை பாதியாக அறுத்துக்கொள்ளவும்.

பின்பு 1 கற்றாழையை எடுத்து அதனில் உள்ள ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். அதன்பிறகு இந்த 3 முறையை கடைபிடிக்கவும்.

மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்கவைத்து அதனை காட்டன் துணியில் ஒத்தி முகம் முழுக்க மசாஜ் செய்ய வேண்டும்.

இதன்மூலம் நாம் போடும் இந்த பேக் நன்கு முகத்தில் இறங்கும். அதனால் இந்த கோல்டன் ஃபேஷியல் அதிக பலனை தரும்.

அடுத்து முல்தானிமட்டியை ஆரஞ்சின் மேல் தடவி முகத்தில் பூசி கொள்ளவும். குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளோர்க்கு முல்தானிமட்டி சிறந்த ஒன்று.

மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவை பயன்படுத்தலாம்.

இதனை கண்கள், மூக்கு, நெத்தி, தாடை ஆகிய அனைத்து பகுதிகளிலும் நன்கு தடவி மசாஜ் செய்யவும்.

பின்பு 5 நிமிடம் கழித்து முகத்தை உலர்த்த தண்ணீரில் கழுவி விடவும்.

அடுத்து கற்றாழை ஜெல்லை 1/4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அத்தோடு ஆரஞ்ஜ் சாற்றை 5 முதல் 10 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும்.

அதன்பிறகு அதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் பண்ணவும்.

பிறகு இதனை 10 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும். கடைசியாக காட்டன் துணியில் துடைத்துவிடவும்.

இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வர சொர சொரப்பாக இருந்த முகம் மிகவும் பொலிவுடனும், அழகாகவும் மாறும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பெரியதாக இருக்கும் மார்பகங்களை இயற்கை வழிகளில் குறைப்பது எப்படி?

nathan

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ராஜ்கிரண்… இவ்வளவு அழகான பிள்ளைகளா?நம்ப முடியலையே…

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புகள்

nathan

உங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யும் மூலிகைகள் :

nathan

பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற

nathan

கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி -தெரிஞ்சிக்கங்க…

nathan

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்

nathan

வேப்ப இலையை வைத்து பொடுகை போக்குவது எப்படி…?

nathan

சருமத்தில் கரும்புள்ளிகளை போக்கும் சூப்பர் பேஷியல்

nathan