29.3 C
Chennai
Sunday, Jul 27, 2025
face 1
அழகு குறிப்புகள்

முகம் பொலிவு பெற இந்த எளிய குறிப்புகளை செய்யுங்கள்!…

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் குணமாகும்.

திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.

face 1

ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது.

மேலும் முகம் பொலிவு பெறும். புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.

பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும்.

மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது. முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.

காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் பாத்து நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும் கிருமிகள் அழிந்து விடும்.

Related posts

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க ,beauty tips tamil,beauty tips skin tamil

nathan

நாளடைவில் பித்த வெடிப்பு போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

கள்ளத்தொடர்பு வைத்திருந்த மின்சார கண்ணா பட நடிகை.. வெளிவந்த தகவல் !

nathan

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

sangika

வாரத்தில் இரண்டு முறை செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும் உருளை அழகு குறிப்புகள்..

nathan

சர்வதேச பெண்கள் தினம் ஏன் மார்ச் 8?

nathan

மூக்கிட்கான அழகு குறிப்புகள்

nathan