27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
mathulai
அழகு குறிப்புகள்

வௌ்ளைப்படுதல் பிரச்னையில் இருந்து மிக எளிதாகத் தீர்வு காண மாதுளம் பூ!…

மாதுளை ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள, பெரும்பாலும் எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய பழம் என்பது நமக்குத் தெரியும். அது ரத்தத்தை விருத்தியடையச் செய்யும்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். ஆனால் மாதுளம் பூவில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருக்கின்றன என்பதே நம்மில் பலருக்கும் தெரியாது.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு சிட்டினை அளவுக்கு சாப்பிட்டு வர வுண்டும். அப்படி சாப்பிட்டு வந்தால் தீராத இருமலும் குணமடையும்.

mathulai

மாதுளம்பூவின் சாறு, அருகம்புல் சாறு ஆகியவற்றைச் சமமாகச் சேர்த்து ஒரு வேளைக்கு 30 மில்லி வீதம் மூன்று தினங்களுக்குக் குடித்து வர, பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் அளவுக்கதிகமாக உண்டாகும் உதிரப்போக்கு சரியாகும்.

மாதுளம்பூக்கள் 15 கிராம் எடுத்து, 25 கிராம் சர்க்கரை சேர்த்து நன்கு மை போல அரைத்து, காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வௌ்ளைப்படுதல் பிரச்னையில் இருந்து மிக எளிதாகத் தீர்வு காணலாம்.

மாதுளம்பூச்சாறு 15 மில்லி அளவு எடுத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமடையும்.

உடல் சூடு தணியும்.

மூக்கடுப்பு தீரும்

வாந்தி, மயக்கத்துக்கு கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம்பூக்களை தலையில் சூடினால் தலைவலி தீரும்.

Related posts

தினமும் ஆயில் புல்லிங்!…

nathan

சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

nathan

முகம் பளபளக்க சீரகத் தண்ணீர்!…தெரிந்துகொள்வோமா?

nathan

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ இத செய்யுங்கள்!…

sangika

சுவையான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

nathan

கோடை காலப் பராமரிப்பு! கோடையை எதிர்கொள்வோம்!! குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்!! ~ பெட்டகம்

nathan

பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற

nathan

நயன்தாரா முதல் நாகார்ஜுனா வரை…சொந்தமாக விமானம் வைத்திருக்கும் நடிகர், நடிகைகள்

nathan

முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற இப்படி செய்து வாருங்கள்!…..

sangika