25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
ORANGE
முகப் பராமரிப்புஅழகு குறிப்புகள்

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

ஆரஞ்சு சாறை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ”ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது. வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும்.

அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

ORANGE

சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது – கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும். கண்கள் “ப்ளிச் ஆக ஆரஞ்சு ஜூஸை ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள்.

இதை வெள்ளைத் துணியில் சுற்றி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். இவ்வாறு செய்வதால் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கும். முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை… இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

Related posts

சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அழகான தோல் மற்றும் முடிக்கு அவசியமான அழகு குறிப்புகள்!

nathan

முகத்தில் இருக்கும் சுருக்கத்தைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…

nathan

முகம் பளபளப்பாக…சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதை மறைக்க இதோ சில வழிகள்!!!

nathan

கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பிரகாசமாக்கும் அழகு குறிப்புகள்…!!

nathan

அடேங்கப்பா! இதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய்யின் தங்கை புகைப்படம்.!

nathan

முக அழகை அதிகரிக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்

nathan

குளிர்ச்சி குளியல்

nathan