உலகில் ஒவ்வொரு பெண்ணும் அழகு தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தாலும், அனைத்து பெண்களும் ஆசைப்படுவது வெண்மையான நிறத்தை மட்டுமே. இந்த ஆசையின் விளைவுதான் ஆயிரக்கணக்கான உடனடி வெண்மையைப் பெறக் கூடிய அழகு சாதனப் பொருட்கள்.
சந்தை விற்பனையில் உச்சத்தை எட்டக் கூடிய வகையில் இந்த வகை உடனடி அழகு சாதனப் பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. ஆனால் எல்லா பொருட்களுமே அதன் பயன்பாட்டில் வெற்றியைத் தருவது இல்லை. நீங்கள் நினைக்கும் உடனடி வெண்மையான சருமம் பெற கீழே உள்ள இயற்கைக் குறிப்புகளைப் பின்பற்றலாம்.
சந்தனம், ஆரஞ்சு தோல் பேஸ்பேக்
ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து, சரும சேதங்களைச் சமநிலைப்படுத்துகிறது. இயற்கையான முறையில் இது சருமத்தை ப்ளீச் செய்கிறது. இதனால் கட்டிகள் மறைகின்றன. சந்தனத்திற்கு இயற்கையான முறையில் சருமத்தை வெண்மையாக்கும் பண்பு இருப்பதால், உங்கள் சருமம் களங்கமற்றதாக வெண்மை நிறத்தைப் பெறுகிறது.
தேவையான பொருட்கள்
. ஒரு ஸ்பூன் சந்தனத்தூள்
. ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர்
செய்முறை
. ஒரு கிண்ணத்தில் சந்தனத்தூள் மற்றும் ஆரஞ்சு தோல் பவுடர் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
. இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, சிறிது நேரம் காய விடவும்.
. பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
பால் க்ரீம், வால்நட் பேஸ் பேக்
வால்நட்டில் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அத்தியாவசிய வைட்டமின் போன்றவை இருப்பதால், சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து சரும நிலையை மேம்படுத்துகிறது. இதனுடன் பால் க்ரீம் சேர்த்து தயாரிக்கும் ஒரு கலவை, சருமத்தை ஆழமாக ஊடுருவி, சருமத்திற்கு உடனடி வெண்மையைத் தருகிறது.
தேவையான பொருட்கள்
. 4 வால்நட்
. 1 ஸ்பூன் பால் க்ரீம்
செய்முறை
. ஒரு இரவு முழுவதும் வால் நட்டை ஊற வைக்கவும்.
. மறுநாள் காலை, ஊறவைத்த வால் நட்டை அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
. அதனுடன் பால் க்ரீமை சேர்க்கவும்.
. இந்த கலவையை முகத்தில் சுழல் வடிவத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற விடவும்.
. பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவித் துடைக்கவும்.
பால், தக்காளி பேஸ்பேக்
சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை பால் தருகிறது. அதே நேரத்தில் தக்காளி, சருமத்தின் ஆழத்திற்குச் சென்று சுத்தப்படுத்துகிறது. இதனால் சருமம் உடனடி வெண்மை பெறுகிறது.
தேவையான பொருட்கள்
. 2 ஸ்பூன் தக்காளி விழுது (கொட்டை நீக்கியது)
. 2 ஸ்பூன் காய்ச்சாத பால்
செய்முறை
. ஒரு கிண்ணத்தில் தக்காளி விழுது மற்றும் பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
. இந்த கலவையில் பஞ்சை நனைத்து, முகத்தில் தடவவும்.
. 15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
. பின்பு தண்ணீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
பன்னீர், கடலை, கோதுமை மாவு பேஸ்பேக்
பன்னீர் சருமத்திற்கு இதமளித்து ஈரப்பதம் தருகிறது. கடலை மாவு மற்றும் கோதுமை மாவில் உள்ள இயற்கை நொதிகள் , சருமத்திற்கு உடனடி பளபளப்பைத் தருகிறது.
தேவையான பொருட்கள்
. 2 ஸ்பூன் பன்னீர்
. ஒரு ஸ்பூன் கடலை மாவு
. ஒரு ஸ்பூன் கோதுமை மாவு
. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
செய்முறை
. எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
. இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி காய விடவும்.
. கலவை நன்கு காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
அன்னாசிப்பழம், தேன் பேஸ் பேக்
இந்த பொருட்களின் ஒன்றிணைந்த கலவை, சருமத்தின் ஆழத்தில் ஊடுருவி, துளைகளை சுத்தம் செய்கிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் போக்கி, சருமத்திற்கு உடனடி பொலிவைத் தருகிறது.
தேவையான பொருட்கள்
. 1-2 ஸ்பூன் நன்றாக மசித்த அன்னாசிப் பழ விழுது
. ஒரு ஸ்பூன் தேன்
செய்முறை
. ஒரு கிண்ணத்தில் அன்னாசிப்பழ விழுது மற்றும் தேனை ஒன்றாகக் கலந்து ஒரு விழுதாக்கிக் கொள்ளவும்.
. இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
. பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
எலுமிச்சை சாறு, பப்பாளி பேஸ்பேக்
இந்த பேக் தயாரிக்கத் தேவையான இரண்டு மூலப்பொருட்களும் இயற்கையாக ப்ளீச் தன்மைக் கொண்ட பொருட்களாகும். ஆகவே, உடனடி பளபளப்பை சருமத்தில் கொண்டுவர இந்த இரண்டு மூலப்பொருட்களும் மிகச் சிறந்த முறையில் உதவுகின்றன.
தேவையான பொருட்கள்
. ஒரு துண்டு பப்பாளி (நன்கு மசித்தது)
. ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு
. ஒரு ஸ்பூன் பால்
செய்முறை
. எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, ஒரு மென்மையான விழுதாக தயாரித்துக் கொள்ளவும்.
. இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவவும்.
. 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
. பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
ஓட்ஸ், யோகர்ட் பேஸ்பேக்
இந்த பேஸ் பேக், சருமத்தைத் தளர்த்தி, வெண்மையைத் தருகிறது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், திட்டுக்கள், கட்டிகள் ஆகியவற்றைப் போக்கி சருமத்திற்கு பொலிவை மீட்டுத் தருகிறது.
தேவையான பொருட்கள்
. 2 ஸ்பூன் யோகர்ட்
. ஒரு ஸ்பூன் ஓட்ஸ்
செய்முறை
. ஓட்ஸ் மற்றும் யோகர்ட்டை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
. இந்த பேக்கை உங்கள் முகத்தில் சுழல் வடிவத்தில் தடவவும்.
. 20 நிமிடங்கள் இந்த கலவையை உங்கள் முகத்தில் வைத்திருக்கவும்.
. பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
மேலே கூறிய எல்லா குறிப்புகளும் நிமிடத்தில் தயாரிக்கக் கூடியவை ஆகும். ஆனால் இதன் விளைவுகள் எல்லோரையும் கவரும் விதத்தில் அமையும் என்பது உறுதி. சிறந்த தீர்வுகள் பெற இந்த குறிப்புகளைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் பின்பற்றவும்.