30.5 C
Chennai
Tuesday, Jun 18, 2024
vv
தலைமுடி சிகிச்சை

இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…அதுவும் இயற்கையான முறையில்..முடி சரசரனு வேகமா வளர..

ஆரோக்கியமான கூந்தலை உடையவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவராகவும் இருக்கிறார்கள். உங்களுக்கு ஏற்கனவே அடர்த்தியான அழகான கூந்தல் இருந்தாலும் அல்லது அதற்கான தேடலில் இருந்தாலும், உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு எது மிகவும் தேவை என்று உணர்ந்து கொள்வது அவசியம். இயற்கையான முறையில் உங்கள் கூந்தலை வேகமாக வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல ஒரு சில பொருட்கள் உதவுகின்றன. ஆகவே இந்த பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வதால், எளிய முறையில் உங்கள் கூந்தல் வளர்ச்சியை உங்களால் அதிகரிக்க முடியும் , அதுவும் இயற்கையான முறையில்..

vvகூந்தல் வளர்ச்சி
கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய்கள் மிக முக்கிய காரணமாக உள்ளன. பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கு பழக்கம் இன்றைய நாட்களில் மிகவும் குறைந்து விட்டது. நேரமின்மை மற்றும் ஸ்டைல் காரணமாக தலை முடிக்கு எண்ணெய் தடவுவதைப் பலரும் புறக்கணிக்கின்றனர். ஆனால், தலை முடிக்கு எண்ணெய் தடவுவதால் தலைமுடியின் வேர்க்கால்கள் வலிமை பெற்று முடி வளர்ச்சி தூண்டப் படுகிறது. குறிப்பாக சில எண்ணெய்களை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கிறது. விரைவான கூந்தல் வளர்ச்சி, பேன் ஒழிப்பு , பொடுகு போக்குவது , முடி உதிர்வைக் குறைப்பது போன்றவற்றில் சில எண்ணெய்கள் நல்ல தீர்வைத் தருகின்றன. மக்கள் பொதுவாக பாதிக்கப்படும் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் முடி வளர்ச்சி சாத்தியமாகிறது.
2 1554122343

எப்படி வளரும்?
சில குறிப்பிட்ட எண்ணெய்களைக் கொண்டு தலை முடிக்கு மசாஜ் செய்வது, சில குறிப்பிட்ட எண்ணெய்களை கண்டிஷ்னரில் கலந்து தேய்ப்பது போன்ற முறைகள் நல்ல ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றன. அந்த வகையில் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சில எண்ணெய்கள் , மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் ஆகியவை இதோ உங்களுக்காக.. அடர்த்தியான நீளமான கூந்தல் பெற, கீழே குறிப்பிட்டுள்ள எண்ணெய்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கியமான கூந்தலைப் பெற்றிடுங்கள்.
3 1554122354

லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்
எல்லா விதமான கூந்தலுக்கும் ஏற்ற விதத்தில் விளங்கும் ஒரு எண்ணெய் லாவெண்டர் எண்ணெய். லாவெண்டர் எண்ணெய்யில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்பு, உச்சந்தலையில் உண்டாகும் தொற்று பாதிப்பைப் போக்க உதவுகிறது. உங்கள் தலைமுடியில் உள்ள பொடுகைப் போக்கவும், அடர்த்தியான கூந்தலைப் பெறவும், லாவெண்டர் எண்ணெய் சிறந்த பலனைத் தருகிறது. ஒரு கண்ணாடி பாத்திரத்தில் லாவெண்டர் எண்ணெய் சிறு துளிகள் சேர்த்து, அதன் மேல் சிறிதளவு எக்ஸ்ட்ரா ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும். பிறகு இறுக்கமாக அந்தப் பாதிரத்தை மூடவும். மூன்று முதல் நான்கு வாரங்கள் இந்த எண்ணெய்யை அப்படியே மூடி வைத்திருந்து பின்பு, லாவெண்டர் எண்ணெய் ஊறிய அந்த எண்ணெய்யை எடுத்துப் பயன்படுத்தவும். அந்த லாவெண்டர் எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவும். ஒரு இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு , அடுத்த நாள் காலை மிதமான மூலிகை ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். இப்படி செய்வதால் விரைவில் உங்களுக்கு நீளமான அடர்த்தியான பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.

4 1554122363

ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்
எந்த வித பாகுபாடின்றி எல்லா வித கூந்தலுக்கும் பலனளிக்கும் மற்றொரு எண்ணெய் ரோஸ்மேரி எண்ணெய். உற்சாகமும், ஊக்கமும் தரும் விதத்தில் அமைத்திருக்கும் இந்த எண்ணெய்யின் நறுமணம், முடி வளர்ச்சியை விரைவாக்குவதுடன் ஆரோக்கியமான வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்துவதால் நரை முடி வளர்ச்சி தாமதமாகிறது. ஆகவே நீண்ட நாட்கள் கருமையான நீளமான கூந்தலுடன் அழகாக இருக்க முடியும். நரை முடி வளர்ச்சியை தாமதிக்க ஒரு சிறந்த வழி, ரோஸ்மேரி இலைகளை கை நிறைய எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு தலையை அலசுவதால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இப்படி செய்து வருவதால், உங்கள் முடி கருமையாக வளரும். அல்லது, ரோஸ்மேரி எண்ணெய் சில துளிகள் எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் தடவலாம். இப்படி செய்வதால், தலை முடியின் வேர்க்கால்கள் ஊக்குவிக்கப்பட்டு, இயற்கையாகவே அடர்த்தியான கூந்தல் கிடைக்கிறது. உங்கள் கூந்தலின் இயற்கையான வளர்ச்சிக்கு மற்றொரு வழி, ரோஸ்மேரி எண்ணெய்யை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஷாம்பூவை வாங்கி பயன்படுத்தலாம்.

 

 

Related posts

தெரிஞ்சிக்கங்க…இந்த பழக்கங்கள் தான் தலையில் பொடுகு மோசமாவதற்கு காரணம்-ன்னு தெரியுமா?

nathan

இப்படி முடி வெடிக்குதா? ஒரே நாள்ல சரியாக தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க…

nathan

பொடுகைப் போக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இயற்கை ஷாம்பு வீட்டிலே தயாரிக்கலாமே..

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரையை போக்கும் மூலிகை தைலம்

nathan

இள நரையை மறையச் செய்யனுமா? இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!!

nathan

சிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு

nathan

கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையா? இதோ இயற்கை முறையில் அற்புதமான தீர்வுகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! சுருள் முடி உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனையும் – தீர்வும்

nathan